முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

119 தொகுதிகளில் இன்று ஒரேகட்டமாக நடக்கிறது: தெலுங்கானாவில் இன்று சட்டப்பேரவை தேர்தல் : ஆட்சியை கைப்பற்ற மும்முனை போட்டி

புதன்கிழமை, 29 நவம்பர் 2023      இந்தியா
Election-1 2023-11-06

Source: provided

ஐதராபாத் : தெலுங்கானாவில் இன்று 119 தொகுதிகளில் இன்று ஒரேகட்டமாக சட்டப் பேரவை தேர்தல் நடைபெறுகிறது. அங்கு ஆட்சியை கைப்பற்ற பாரதிய ராஷ்டிர சமிதி, காங்கிரஸ், பா.ஜனதா இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பாக இந்த ஆண்டுடன் ஆட்சிகாலம் நிறைவடையும் 5 மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் ஆணையர் அக்.9-ம் தேதி அறிவித்தார். அதன்படி, மிசோரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் தேர்தல் முடிந்து விட்டது. அடுத்து எஞ்சியிருக்கும் தெலங்கானா மாநிலத்துக்கு இன்று(வியாழக்கிழமை-நவ.30) தேர்தல் நடைபெற உள்ளது. 

தெலங்கானா சட்டப்பேரவைத் தோ்தல் இன்று நடைபெறவுள்ளது. இதில் முதல்வா் கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் களமிறங்கியுள்ளது. பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 3-ஆம் தேதி துவங்கியது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் நவம்.10 ம் தேதி முடிவடைந்தது. நவம்.13-ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். 15-ஆம் தேதி வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் ஆகும்.

மொத்தமுள்ள 119 தொகுதிகளிலும் ஆளும் பி.ஆர்.எஸ் கட்சி போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி 118 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாஜக 111 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. 119 தொகுதிகளில் போட்டியிடும் 4,798 வேட்பாளர்கள் 5,716 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதிகபட்சமாக கஜ்வெல் தொகுதியில் 145 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இத்தொகுதியில் முதல்வர் சந்திரசேகர ராவ் மீண்டும் போட்டியிடுகிறார். 

மேட்ச்சல் தொகுதியில் 116 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். குறைந்தபட்சமாக நாராயணப்பேட்டை தொகுதியில் 19 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.  முன்னதாக தெலுங்கானாவில் அனல் பறக்கும் பிரச்சாரம் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. ஆட்சியை பிடிக்க பாரதிய ராஷ்டிர சமிதி, காங்கிரஸ், பா.ஜனதா மும்முனை போட்டி நிலவுகிறது. முன்னதாக பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று முன்தினம் தலைவர்கள் அனைவரும் இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். 119 தொகுதிகள் அடங்கிய தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3-ஆம் தேதி எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

பெண் வாக்காளர்கள் அதிகம்

தெலங்கானாவில் முதன்முறையாக ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.  தெலங்கானாவில் இறுதி வாக்காளர் பட்டியலின்படி பெண் வாக்காளர்கள் 1,63,01,705 பேர். ஆண் வாக்காளர்கள் 1,62,98,418 பேர். மூன்றாம் பாலினத்தவர் 2,676 பேர்.  இதையடுத்து முதல்முறையாக இந்த தேர்தலில் ஆண்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து