முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சனாதனம் குறித்து உதயநிதி பேச்சு: மனுதாரர் சென்னை ஐகோர்ட்டை அணுக சுப்ரீம் கோர்ட் அறிவுரை

புதன்கிழமை, 29 நவம்பர் 2023      இந்தியா
Supreme-Court 2023-04-06

Source: provided

புதுடில்லி : சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேச்சுக்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யுமாறு மனதாரருக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

சென்னையில் நடந்த நிகழ்ச்சியின் சனாதனம் குறித்து உதயநிதி பேசிய பேச்சுகள் தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், மத வெறுப்பு பேச்சுக்கு எதிரான மனுக்கள் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பாட்டியா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது உதயநிதி பேச்சுக்கு எதிராக அமித்த சச்தேவா என்பவர் தாக்கல் செய்த மனுவும் விசாரணைக்கு வந்தது.

அதற்கு நீதிபதிகள், மத வெறுப்பு பேச்சுகள் தொடர்பான மனுக்கள் தனித்தனியாக விசாரிக்கப்படும். அமைச்சர் உதயநிதி பேசிய சனாதனம் குறித்த பேச்சை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது. எனவே அதனை விசாரணைக்கு எடுக்க முடியாது. நீங்கள் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யுங்கள் என வாய்மொழி உத்தரவை பிறப்பித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து