முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

41 தொழிலாளர்களுக்கும் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி : நேரில் வழங்கிய உத்தரகாண்ட் முதல்வர்

புதன்கிழமை, 29 நவம்பர் 2023      இந்தியா
Uttarakhand 2023-11-29

Source: provided

உத்தரகாசி : உத்தராகண்ட் சுரங்க விபத்தில் சிக்கி மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களுக்கும் மாநில அரசு சார்பில் தலா ரூ. ஒரு லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.

உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கிக் கொண்ட 41 தொழிலாளர்கள் 17 நாட்கள் நடைபெற்ற தொடர் மீட்புப் பணிகளுக்குப் பிறகு நேற்று முன்தினம் இரவு அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனையடுத்து, அனைவரும் அருகில் உள்ள சின்யாலிசார் சமூக நல மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அனைவரும் ஆரோக்கியமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், மருத்துவ மையத்துக்கு நேற்று காலை சென்ற மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, தனித்தனியாக ஒவ்வொருவரிடமும் சென்று நலம் விசாரித்தார். அப்போது, அவர்களின் மன உறுதியை பாராட்டும் விதமாக ஒவ்வொருவருக்கும் தலா ரூ. ஒரு லட்சம் நிதி உதவி வழங்கினார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் புஷ்கர் சிங் தாமி, 

மிகவும் சவால் நிறைந்ததாக மீட்புப் பணி இருந்தது. மீட்புப் பணியில் ஈடுபட்ட ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒருநாள் கூட தவறாமல், பிரதமர் மோடி ஒவ்வொரு முன்னேற்றம் குறித்தும் கேட்டறிந்தார். மீட்புப் பணிகளில் மேற்கொள்ளப்பட்ட சின்ன சின்ன விஷயத்தையும் கேட்டறிந்தார்.

அதோடு, அவர் தனது ஆலோசனைகளையும் வழங்கினார். மேலும், உள்ளே சிக்கி இருப்பவர்களின் மனநலனை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு எவ்வாறு அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை வழங்கினார்.

41 பேரின் உடல் நலமும் பரிசோதிக்கப்பட்டது. அனைவரும் நலமுடன் இருக்கிறார்கள். 41 பேரின் உடல் நலனில் ஒரு தந்தையைப் போல் பிரதமர் மோடி மிக கவனமாக இருந்தார். ஒவ்வொருவரையும் பத்திரமாக மீட்பதில் பிரதமர் மோடியின் தலைமைப் பண்பு மிக முக்கியக் காரணமாக இருந்தது.

41 பேரின் துணிச்சலைப் பாராட்டும் விதமாக ஒவ்வொருவருக்கும் சிறிய தொகையை அரசு வழங்கி இருக்கிறது. 41 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டதற்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் என தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து