முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

புதன்கிழமை, 29 நவம்பர் 2023      தமிழகம்
CM-2 2023-11-29

Source: provided

சென்னை : சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 12 கோடியே 54 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவ, மாணவியருக்கான 5 விடுதிக் கட்டிடங்களையும் மற்றும் 2 கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் 6 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவில் உட்கட்டமைப்பு பணிகள் நிறைவுற்ற பள்ளி கட்டிடங்களையும் திறந்து வைத்தார். 

நாமக்கல் மாவட்டம், குமாரப்பாளையத்தில் 100 மாணவர் தங்கும் வசதியுடன், 2 கோடியே 16 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலக்கல்லூரி மாணவர் விடுதிக்கட்டிடம், பெரம்பலூர் மாவட்டம் வேப்பூரில் 100 மாணவியர் தங்கும் வசதியுடன், ரூ.2 கோடியே 77 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவியர் விடுதிக் கட்டிடம், புதுக்கோட்டை மாவட்டம், மருதன்கோன்விடுதியில் 100 மாணவர்கள் தங்கும் வசதியுடன், ரூ.2 கோடியே 12 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவர் விடுதிக் கட்டிடம், திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் 100 மாணவியர் தங்கும் வசதியுடன், ரூ.3 கோடியே 34 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவியர் விடுதிக் கட்டிடம், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் 100 மாணவியர் தங்கும் வசதியுடன், ரூ.2 கோடியே 15 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவியர் விடுதிக் கட்டிடம் என மொத்தம் ரூ. 12 கோடியே 54 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 5 விடுதிக் கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மதுரை மாவட்டம்-கோவிலாங்குளம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் தெப்பத்துப்பட்டி ஆகிய இடங்களிலுள்ள 2 கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (நபார்ட்) நிதி உதவியுடன் ரூ. 6 கோடியே 51 லட்சத்து 70 ஆயிரம் செலவில் அறிவியல் ஆய்வகங்கள், கூடுதல் கழிப்பறைகள், ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் ஆகிய நிறைவுற்ற உட்கட்டமைப்புப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து