முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுக்குமாடி குடியிருப்பு திட்ட பதிவு கட்டண குறைப்பு அமலுக்கு வந்தது

வெள்ளிக்கிழமை, 1 டிசம்பர் 2023      தமிழகம்
Bathiram 2023 08 02

Source: provided

சென்னை : அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில், வீடு விற்பனைக்கான முத்திரை தீர்வை, பதிவு கட்டணம்  குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 

தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில்,  வீடு விற்பனையின் போது, நிலத்தின் பிரிபடாத பங்கான, யு.டி.எஸ். அளவையும், மதிப்பையும் குறிப்பிட்டு,  கிரைய பத்திரம் பதிவு செய்யப்படும். இதற்கு, முத்திரைத்தீர்வை 7 சதவீதம், பதிவு கட்டணம் 2 சதவீதம்  வசூலிக்கப்படும். 

அதன் தொடர்ச்சியாக, கட்டுமான ஒப்பந்தம் தனியாக பதிவு செய்யப்படும். இரு வகையான  பத்திரங்கள் பதிவு செய்யும் நடைமுறை மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, நிலத்தின் பிரிபடாத பங்கு,  கட்டடத்தின் அளவு, மதிப்பு குறிப்பிடப்பட்டு, ஒரே பத்திரம் பதிவு செய்யும் புதிய நடைமுறை, நேற்று(டிச.1-ல்)  அமலுக்கு வந்துள்ளது. 

இதன்படி பதிவாகும் பத்திரங்களுக்கான கட்டணங்கள்  குறைக்கப்பட்டுள்ளன. 50 லட்சம் ரூபாய் வரையிலான வீடுகளின் பத்திரங்களுக்கு, 4 சதவீதம் முத்திரை  தீர்வை, 2 சதவீதம் பதிவு கட்டணம் செலுத்தினால் போதும்.  இதே போன்று, 3 கோடி ரூபாய் வரை மதிப்புள்ள வீடுகளின் பத்திரங்களுக்கு, 5 சதவீதம் முத்திரை தீர்வை,  2 சதவீதம் பதிவு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், நேற்று முதல் இது அமலுக்கு வந்துள்ளது என்றும் பதிவுத்  துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து