முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு தேர்வுகள்: முக்கிய அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 1 டிசம்பர் 2023      இந்தியா
CBSE 2023 07-14

Source: provided

புதுடெல்லி : மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் நடத்தப்படும் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளின்போது, எந்த தனிப்பட்ட அறிவிப்பு அல்லது உயர் மதிப்பீட்டையோ வழங்காது என, மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மாணவர்களிடையே தேவையற்ற போட்டி மனப்பான்மையை தடுக்கும் வகையில் முதலிடம் பிடித்த மாணவர்கள் என்பது போன்ற எந்த ஒரு தனிப்பட்ட மாணவர்களின் பட்டியலையும் சி.பி.எஸ்.இ. வெளியிடுவது வெகு காலமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒட்டுமொத்தமாக அனைத்துப் பிரிவுகளில் அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் என்ற எந்த தகவலையும் சி.பி.எஸ்.இ. வெளியிடாது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

"மதிப்பெண் வித்தியாசம் அல்லது மதிப்பெண்களின் மதிப்பீடு என எதுவும் வழங்கப்படாது. மேலும், ஒரு மாணவர் ஐந்து பாடங்களுக்கு மேல் படித்து தேர்வெழுதினால், அதில் சிறந்த ஐந்து பாடங்களைத் தீர்மானிக்கும் முடிவை அவர்களை உயர்கல்வியில் சேர்க்கும் நிறுவனம் அல்லது வேலைக்கு தேர்வு செய்பவர்களே தேர்வு செய்து எடுத்துக் கொள்ளலாம்" என்று சி.பி.எஸ்.இ. தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் கூறினார்.

அதுபோல மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தேர்வு முடிவுகளின்போது, மதிப்பெண்களின் சதவீதத்தை கணக்கிடவோ, அறிவிக்கவோ அல்லது தெரிவிக்கவோ இல்லை என்றும் பரத்வாஜ் கூறினார். உயர்கல்வி அல்லது வேலைவாய்ப்பில் மதிப்பெண்களின் சதவீதம் தேவைப்பட்டால், மாணவர்களை சேர்க்கும் கல்விநிலையங்கள்  அல்லது வேலை வாய்ப்பளிக்கும் நிறுவனங்களால் கணக்கிட்டுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். முன்னதாக, சி.பி.எஸ்.இ. ஆரோக்கியமற்ற போட்டியைத் தவிர்க்க தகுதிப் பட்டியல்களை வெளியிடும் நடைமுறையையும் நீக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து