முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 தொடரை கைப்பற்றியது இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சி : ருதுராஜ் கெய்க்வாட் பேட்டி

சனிக்கிழமை, 2 டிசம்பர் 2023      விளையாட்டு
Rudraaj-Gaekwad 2023-12-02

Source: provided

மும்பை : உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு கிடைத்துள்ள டி20 தொடர் வெற்றி ரசிகர்களுக்கு சிறிது மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாக இந்திய அணியின் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

பெரும் ஏமாற்றம்...

உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து அதிர்ச்சியளித்தது. இந்திய அணி உலகக் கோப்பையைக் கைப்பற்றும் எனக் காத்திருந்த ரசிகர்களுக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வி பெரும் ஏமாற்றமாக அமைந்தது. உலகக் கோப்பைத் தொடர் முடிவடைந்த சில நாள்களிலேயே இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்கியது. இந்தத் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. 

சிறிது மகிழ்ச்சி...

இந்த நிலையில், உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு கிடைத்துள்ள டி20 தொடர் வெற்றி ரசிகர்களுக்கு சிறிது மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளதாக ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு அவர் பேசியதாவது: உலகக் கோப்பையில்  ஏற்பட்ட தோல்வி அனைவருக்கும் ஏமாற்றமளித்த நிலையில், இந்த டி20 தொடர் வெற்றி அனைவருக்கும் சிறிது மகிழ்ச்சியை கொடுக்கும் என நினைக்கிறேன். 

ஆலோசித்தோம்...

ஆட்டத்தை ரசித்து விளையாட வேண்டியது முக்கியம் என நினைக்கிறேன். அனைவரும்  ஒவ்வொரு படிநிலையில் பொறுப்புகளை ஏற்று விளையாடுகின்றனர். டி20 தொடரில் வெற்றி பெற்றது எங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. ஆனால், இந்த டி20 தொடரில் மீதம் ஒரு போட்டி இருக்கிறது. அச்சமின்றி விளையாட வேண்டும் என்பது குறித்து ஆலோசித்தோம். உலகக் கோப்பை அணியில் இருந்த 2-3 வீரர்கள் அணியில் இருந்தது அணிக்கு பலம் சேர்த்தது.

கற்றுக்கொண்டேன்...

அனைவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாடியுள்ள வீரர்கள் என்பதால் அணியில் நேர்மறையான ஆற்றல் இருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். ஆட்டத்தின் போக்கை கணிப்பதிலும், ஆட்டத்தைப் புரிந்துகொள்வதிலும் மகேந்திர சிங் தோனி கவனம் செலுத்தி அணியை சிறப்பாக வழிநடத்துவார். நமது எண்ணங்களை சிதறவிடக் கூடாது என அவர் கூறுவார். தொடக்க ஆட்டக்காரராக சிறப்பான பங்களிப்பை வழங்க உனக்கு போதுமான நேரமிருக்கிறது எனவும் கூறுவார் என்றார்.

இந்திய அணி புதிய சாதனை

டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பெற்ற அணியாக இந்திய அணி சாதனை படைத்துள்ளது. சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டிச.1-ல் நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி இந்த சாதனையை நிகழ்த்தியது. 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றது இந்திய அணி. இது சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணி பெறும் 136வது வெற்றியாகும். 2006 முதல் தற்போது வரை 213 டி20 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 136 போட்டிகளில் வெற்றி அடைந்துள்ளது.  இந்த வெற்றியின் மூலம் 226 ஆட்டங்களில் 135 வெற்றிகளைப் பெற்றுள்ள பாகிஸ்தானை தாண்டி இந்தியா முதலிடம் பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 days ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 11 hours ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 12 hours ago
View all comments

வாசகர் கருத்து