முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துகள் பொதுத்துறை வங்கிகளுக்கு திரும்பி உள்ளது : பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் தகவல்

செவ்வாய்க்கிழமை, 5 டிசம்பர் 2023      இந்தியா
Nirmala-Seetharaman 2023-04-06

Source: provided

புதுடெல்லி : ரூ.15,186.64 கோடி மதிப்பிலான பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள் பொதுத்துறை வங்கிகளுக்கு திரும்பி உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ரூ.15,186.64 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளதாகவும், இவை அனைத்தும் பொதுத்துறை வங்கிகளுக்கு திருப்பி அளிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் தெரிவித்தார். 

மாநிலங்களவையில் கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், "கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களுக்கு எதிராக பல்வேறு சட்டங்கள் மூலம்  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, இதன் விளைவாக, அதிகளவிலான பணம் வங்கிகளுக்குத் திரும்புகிறது" எனக் கூறினார். மார்ச் 31, 2023 நிலவரப்படி, 13,978 கடன் கணக்குகளுக்கு எதிராக சட்டப்பூர்வ வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

11,483 வழக்குகளில் சர்ஃபேசி(SARFAESI) சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது, 5,674 வழக்குகளில் முதல் தகவல் அறிக்கைகள்(FIR) பதிவு செய்யப்பட்டுள்ளன.  போன் பேங்கிங்(Phone Banking) மூலம் கடன்பெற விரும்பும் மக்களுக்கு தகுதி போன்றவற்றை பாராமல்  கடன் வழங்கப்பட வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து