முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓய்வு குறித்து ரபேல் நடால்

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2023      விளையாட்டு
Nadal 2023-12-08

Source: provided

22 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான ஸ்பெயினை சேர்ந்த நட்சத்திர டென்னிஸ் வீரர் ரபேல் நடால் ஏறக்குறைய 1 ஆண்டுக்கு பின் மீண்டும் டென்னிஸ் களத்திற்கு திரும்ப உள்ளார். காயம் காரணமாக இந்த ஆண்டு நடைபெற்ற எந்த வித டென்னிஸ் தொடரிலும் பங்கேற்காத நிலையில், குணமடைந்த பிறகு மீண்டும் களத்திற்கு திரும்ப உள்ளார். அதன்படி நடால் டிசம்பர் 31 முதல் ஜனவரி 7ஆம் தேதி வரை நடைபெற உள்ள பிரிஸ்பேன் இண்டர்நேஷனல் டென்னிஸ் தொடரில் விளையாட உள்ளார்.

இந்நிலையில் 2024ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரிலும், மற்ற தொடர்களிலும் விளையாடுவதுதான் அவரது டென்னிஸ் வாழ்க்கையில் இறுதி ஆண்டாக இருக்கும் என அவர் கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், 'கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் ஏற்பட்ட காயம் இன்னும் முழுமையாக குணமாகவில்லை. அதனை சரி செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்திற்கும் எனது உடல் முழுமையாக ஒத்துழைக்கவில்லை. மேலும் டென்னிஸ் வாழ்க்கையில் 2024 தனது இறுதி ஆண்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இது நான் எடுக்கும் முடிவு அல்ல, என் உடல் எடுக்கும் முடிவு' என்று கூறினார்.

______________

நியூசிலாந்து 8 ரன்கள் முன்னிலை

கடந்த 6-ம் தேதி நியூசிலாந்து-வங்கேதச அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. போட்டியின் முதல் நாளில் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இதனையடுத்து, நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 55 ரன்களுக்கு 5  விக்கெட்டை  இழந்திருந்தது. இந்த நிலையில், நேற்று முன்தின ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. வங்கதேசம் நியூசிலாந்தைக் காட்டிலும் 117 ரன்கள் முன்னிலையில் இருந்த நிலையில், நேற்று 3-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. 

நியூசிலாந்து வீரர் கிளன் பிளிப்ஸ் அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தார். அவர் 72 பந்துகளில் 87 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், நியூசிலாந்து வங்கதேசத்தைக் காட்டிலும் 8 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனையடுத்து, தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேசம் 38 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.  போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டத்தைத் தொடர்வதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

______________

மிட்செல் ஜான்சனுக்கு வார்னர் பதில்

பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற டிசம்பர் 14 முதல் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டி தனது கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும் என டேவிட் வார்னர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதற்கிடையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சன், டேவிட் வார்னரின் ஃபார்ம் குறித்து விமர்சித்தார். மேலும், டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் பந்தை சேதப்படுத்திய விவகாரம் குறித்தும் அவர் விமர்சித்தார். 

இது தொடர்பாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தெரிவிக்கையில்., அனைவருக்கும் அவரவர் கருத்துகளைக் கூறுவதற்கு உரிமையிருக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு நாங்கள் தயாராகி வருகிறோம். எனது பெற்றோர் எனக்கு கடுமையாக உழைக்கவும், விமர்சனங்களை எதிர்கொள்ளவும் கற்றுக் கொடுத்திருக்கின்றனர். உலக அரங்கில்  இருக்கும்போது நம்மை நோக்கி என்ன நடக்கிறது என்பதை நாம் உணர்வதில்லை. நிறைய ஊடகங்கள் நம்மை கவனிக்கும். நிறைய விமர்சனங்கள் வரும். ஆனால், பல நேர்மறையான விஷயங்களும் உள்ளன என்றார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து