முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டில் புதிதாக 166 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி : மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 10 டிசம்பர் 2023      இந்தியா
Corona 2023 04 02

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் புதிதாக 166 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு முதன்முறையாக கண்டறியப்பட்டது.  பின்னர், பிற நாடுகளுக்கும் தொற்று பரவியது. இதனால், 2020-ம் ஆண்டில் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டன.  மேலும் நாட்டில் முதல் மற்றும் 2-வது கொரோனா அலையில், எண்ணற்ற மக்கள் கொரோனா பாதிப்புகளை சந்தித்தனர்.  பலர் உயிரிழந்தனர். 

இந்நிலையில், இந்தியாவில் புதிதாக 166 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இவற்றில் கேரளாவில் அதிக அளவில் தொற்று பதிவாகி உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

அதன்படி, மொத்தம் 895 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினசரி பதிவாகும் சராசரி தொற்று எண்ணிக்கை 100 ஆக உள்ளது.  சமீபத்திய தொற்று அதிகரிப்பானது, குளிர் காலத்துடன் தொடர்புடையது.  இன்புளூயன்சா போன்ற வியாதிகள் அதிகரிப்பால் இந்த நிலை காணப்படுகிறது.

இந்தியாவில் உயிரிழப்பு விகிதம் 1.19 சதவீதம் என்ற அளவில் உள்ளது.  நாட்டில் இதுவரை 220.67 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன என அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து