எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தமிழகம் முழுவதும் நேற்று 200-க்கும் மேற்பட்ட மையங்களில் இரண்டாம் நிலை காவலர் பதவிக்கான எழுத்து தேர்வு நடந்தது. இந்த தேர்வை பல்லாயிரக்கணக்கானோர் எழுதினர்.
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 3,359 இரண்டாம் நிலை காவலர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
அதில் மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களில் 780 பெண்களுக்கும், தமிழ்நாடு சிறப்பு காவல் படை இரண்டாம் நிலை ஆண் காவலர் பணியிடங்களில் 1819 ஆண்களுக்கும், இரண்டாம் நிலை சிறைக்காவலர் பணியிடங்களில் ஆண்களுக்கு 83 இடங்களும் பெண்களுக்கு 3 இடங்களும், தீயணைப்பாளர் பணியிடங்களில் 674 ஆண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன.
இதற்கான எழுத்து தேர்வு டிசம்பர் 10-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கானோர் இந்தத் தேர்வை எழுதினார்கள்.
சென்னையில் 10 மையங்களில் 12,303 பேர் காவலர் பணிக்கான தேர்வை எழுதினார்கள். இதில் 9,868 பேர் ஆண்கள், 2435 பேர் பெண்கள் ஆவர். செல்போன், டிஜிட்டல் வாட்ச், கால்குலேட்டர் உள் ளிட்ட எலக்ட்ரானிக் உப கரணங்களை தேர்வர்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டு தீவிர சோதனைக்கு பிறகே தேர்வர்களை போலீசார் அனுமதித்தனர். இந்த தேர்வானது காலை 10 முதல் மதியம் 12.40 மணி வரை நடைபெற்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து
15 Dec 202512 அணிகள் இடையிலான 5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடந்து வந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 16-12-2025
16 Dec 2025


