முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெஞ்சு வலி: பிரபல பாலிவுட் நடிகர் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மருத்துவமனையில் அனுமதி

சனிக்கிழமை, 10 பெப்ரவரி 2024      சினிமா
Mithun 2024-02-10

Source: provided

கொல்கத்தா : கடுமையான நெஞ்சுவலி காரணமாக பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி கொல்கத்தாவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கடந்த 1976-ம் ஆண்டு பெங்காலியில் வெளியான மிரிகயா என்ற படத்தின் மூலம் மிதுன் சக்கரவர்த்தி சினிமா துறையில் அறிமுகமானார். அறிமுக படத்திலேயே சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்று திரும்பி பார்க்க வைத்தார். 

இந்தி, பெங்காலி, பஞ்சாபி, தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளில் 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான யாகாவா ராயினும் நாகாக்க படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் எம்.பி.யாகவும் மிதுன் சக்கரவர்த்தி இருந்து வந்துள்ளார். பின்னர், சாரதா நிதி நிறுவன மோசடியில் சிக்கினார். அதை தொடர்ந்து எம்.பி. பதவியை மிதுன் சக்கரவர்த்தி ராஜினாமா செய்தார். 

கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பா.ஜ.க.வில் இணைந்து செயல்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று காலை  கடுமையான நெஞ்சுவலி காரணமாக நடிகர் மிதுன் சக்கரவர்த்தி கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். 

அவர் தற்போது நரம்பியல் மருத்துவ நிபுணரின் மேற்பார்வையில் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் மிதுன் சக்கரவர்த்தி கடந்த மாதம் ஜனாதிபதியிடம் பத்ம பூஷண் விருது பெற்றார் என்பது குறிப்பிடதக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து