முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் தயாரிக்கப்பட்ட டிரோன் எல்லை அருகே கண்டெடுப்பு

ஞாயிற்றுக்கிழமை, 11 பெப்ரவரி 2024      இந்தியா
drone 2023-06-06

Source: provided

சண்டிகர் : பஞ்சாப் மாநிலம்  பாகிஸ்தான் எல்லை அருகே சீனாவில் தயாரிக்கப்பட்ட டிரோன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாதுகாப்புப் படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்கு அருகே உள்ள சான் கலன் கிராமத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் டிரோன் ஒன்று பறந்ததாக எல்லை பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து அந்த பகுதியில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது அங்குள்ள வயல் வெளியில் கிடந்த டிரோனை எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் கைப்பற்றினர். 

அது குவாட்காப்டர் வகையைச் சேர்ந்தது என்றும், சீனாவில் தயாரிக்கப்பட்டது என்பதும் தெரியவந்துள்ளது. இந்த டிரோனை அனுப்பியது யார் என்பது குறித்து எல்லை பாதுகாப்புப் படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து