முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2024      இந்தியா
Congress 2023 03 25

Source: provided

காந்திநகர் : குஜராத் சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 10 பேரை நாள் முழுவதும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். 

குஜராத்தில் நடப்பு ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 2-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரின் நேற்றைய கேள்வி நேரத்தின் போது, கடந்த ஆண்டு சோட்டா உதேபூர் மாவட்டத்தில் போலி அரசு அலுவலகம் அமைத்து நீர்ப்பாசன திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பறித்த விவகாரம் தொடர்பாக எதிர்கட்சி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முழக்கங்களை எழுப்பி  அமளியில் ஈடுபட்டனர்.

சபாநாயகர் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அமைதியடையாததால், காங்கிரசின் இந்த செயலுக்காக அவர்கள் அனைவரையும் நேற்று நாள் முழுவதும் சஸ்பெண்ட் செய்வதற்கான தீர்மானத்தை பா.ஜ.க.வினர் முன்வைத்தனர்.

இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் 10 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் சங்கர் சவுத்ரி நேற்று ஒரு நாள் சஸ்பெண்ட் செய்தார்.  சட்டசபையில் நேற்று இரண்டு அமர்வுகள் இருந்ததால், இந்த 10 எம்.எல்.ஏ.க்களும் இரண்டாவது கூட்டத்திற்கும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்று சபாநாயகர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து