முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முக்கனி மேம்பாட்டுக்கான சிறப்பு திட்டத்திற்கு ரூ.41.35 கோடி ஒதுக்கீடு

செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2024      தமிழகம்
MRK-2 2023-02-20

Source: provided

சென்னை : முக்கனி மேம்பாட்டுக்கான சிறப்பு திட்டத்திற்கு ரூ. 41.35 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25-ம் ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கையையில் முக்கனி மேம்பாட்டு திட்டம் குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது..

முக்கனி மேம்பாட்டுக்கான சிறப்புத் திட்டம் செயல்படுத்திட ரூ. 41.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தென்னாட்டு மா இரகங்கள், ஏற்றுமதிக்கு உகந்த LDIT இரகங்கள் பரப்பினை விரிவாக்கவும், உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், பழைய தோட்டங்களைப் புதுப்பிக்க மானியம் வழங்கவும், கிளை மேலாண்மை பயிற்சியளிக்கவும், உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கான செயல்விளக்கத்திடல்கள் அமைக்கவும் ரூ. 27.48 கோடி நிதி ஒதுக்கீடு.

ரூ. 12.73 கோடி நிதி ஒதுக்கீட்டில் வாழை பரப்பு விரிவாக்கம், முட்டுக் கொடுத்தல் மேற்கொள்ள மானியம், வாழைத்தார் உறைகள் வழங்க மானியம். உள்ளூர், புதிய இரகங்களின் சாகுபடி, சாகுபடித் தொழிநுட்பங்கள் குறித்த பயிற்சி, பலா பதப்படுத்தும் கூடங்கள் அமைக்க ரூ. 1.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து