முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எலான் மஸ்க்கிற்கு நோபல் பரிசு வழங்க பரிந்துரை

வியாழக்கிழமை, 22 பெப்ரவரி 2024      உலகம்
Elon musk 2023-07-13

Source: provided

வாஷிங்டன்:2024-ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசை எலான் மஸ்க்கிற்கு வழங்க வேண்டும் என நார்வே எம்பி மரியஸ் நில்சன் முன்மொழிந்துள்ளார்.

டெஸ்லா,  ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் சமூக வலைத்தளமான டுவிட்டரை 2022- இல் வாங்கி எக்ஸ் என பெயர்மாற்றம் செய்தார். சுதந்திர பேச்சை வெளிப்படுத்த இதனை செய்ததாக அவர் குறிப்பிட்டார். மேலும்,  ரஷியா- உக்ரைன் போரில் உக்ரைன் ராணுவத்துக்கு செயற்கைக்கோள்வழி தொடர்பினை அவரது நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்தது.  இவற்றுக்காக எலான் பெயரை நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கலாம் என மரியஸ் நில்சன் தெரிவித்ததாக பொலிட்கோ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

முற்போக்கு கட்சியை சேர்ந்த மரியஸ் நில்சன்,  ரஷியா – உக்ரைன் போரின் போது செயற்கைக்கோள் தகவல் தொடர்புகளை வழங்கியது, சுதந்திரமான பேச்சு மற்றும் திறந்த உரையாடலுக்கான ஆதரவுக்காக 2024-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை எலான் மஸ்க்கிற்கு வழங்க வேண்டும் என முன்மொழிந்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து