முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்காளதேசம் உள்ளிட்ட 4 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி

வியாழக்கிழமை, 22 பெப்ரவரி 2024      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

புதுடெல்லி:உலகின் இரண்டாவது பெரிய வெங்காய ஏற்றுமதி நாடான இந்தியா, உள்நாட்டு விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக மார்ச் 2024 வரை வெங்காயம் ஏற்றுமதி செய்ய கடந்த ஆண்டு தடை விதித்தது. இதனால் அண்டை நாடுகளில் வெங்காயம் விலை உயர்ந்தது.இந்த நிலையில், வெளியுறவு அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் வங்கதேசம், மொரீஷியஸ், பக்ரைன் மற்றும் பூடான் ஆகிய 4 நாடுகளுக்கு 54,760 டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

வங்காளதேசத்திற்கு 50,000 டன் வெங்காயம், மொரீஷியசுக்கு 1,200 டன், பக்ரைனுக்கு 3,000 டன் மற்றும் பூட்டானுக்கு 560 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார செயலாளர் ரோஹித் குமார் சிங் தெரிவித்துள்ளார்.அடுத்த மாதம் 31ம் தேதி வரை இந்த அளவு ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும், அதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து