முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி., தேர்தலுக்கான தி.மு.க கூட்டணியில் இ.யூ.மு.லீ-கொ.ம.தே.கவுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு

சனிக்கிழமை, 24 பெப்ரவரி 2024      தமிழகம்
Anna-Arivalayam-1

Source: provided

சென்னை : வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொ.ம.தே.கவுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றது. தி.மு.க.வில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. அ.தி.மு.க. தரப்பில் மெகா கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. கடந்த தேர்தல்களில் ஏற்கனவே கூட்டணியில் இருந்த பா.ம.க. மற்றும் தே.மு.தி.க.வை தங்கள் பக்கம் மீண்டும் இழுக்க அ.தி.மு.க. தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய தொடங்கியுள்ளது. அந்த வகையில், தி.மு.க கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மக்களவை தொகுதியில்   நவாஸ் கனி போட்டியிடுவார் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி அறிவித்துள்ளது. அதேபோல், கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்தக் கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. உதயசூரியன் சின்னத்திலேயே கொங்கு மக்கள் தேசிய கட்சி போட்டியிட உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து