முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களவை தேர்தலில் வாக்குகளை தவறாமல் செலுத்த வேண்டும் : முதன்முறை வாக்காளர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 25 பெப்ரவரி 2024      இந்தியா
Modi

Source: provided

புதுடெல்லி : மக்களவைத்தேர்தலில் முதல்முறை வாக்காளர்கள் தங்களது வாக்குகளை தவறாமல் செலுத்த வேண்டும் என்று மான் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். 

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் எனும் மான் கீ பாத் வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு  உரையாற்றி வருகிறார். அந்த வகையில், நேற்று நடந்த மான் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது, 

மார்ச் 8-ல் பெண்கள் தினத்தை நாம் கொண்டாட உள்ளோம். நாட்டின் வளர்ச்சி பயணத்தில் பெண்களின் பங்களிப்புக்கு மரியாதை செய்ய இந்த நாள் சிறப்பான நாள் ஆகும். பெண்களுக்கு சம வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே, உலகம் வளர்ச்சி பெறும் என மகாகவி பாரதியார் கூறியுள்ளார். 

இந்தியாவில், பெண்கள் சக்தியானது அனைத்து துறைகளிலும் புதிய உச்சத்தை தொடுகிறது. கிராமங்களில் வசிக்கும் பெண்களால் டிரோன்களை இயக்க முடியுமா? என கேள்வி எழுந்தது. ஆனால், இன்று அதுவும் சாத்தியமாகி உள்ளது.

இயற்கை விவசாயம், நீர் சேகரிப்பு மற்றும் தூய்மைப்பணிகளில் பெண்களின் தலைமைப்பண்பு வெளிவந்துள்ளது. ரசாயனங்களால், நமது அன்னை பூமியானது அவதிப்பட்டது. வேதனையடைந்தது. ஆனால், நமது பூமியை காப்பதில் பெண்கள் சக்தி முக்கிய பங்கு வகித்தது. 

நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் இயற்கை வேளாண்மையில் பெண்கள் ஈடுபட்டு உள்ளனர். மேலும் தண்ணீர் சேகரிப்பில் நமது சகோதரிகள் மற்றும் பெண்கள் முழுமுயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களவைத்தேர்தலையொட்டி 3 மாதங்களுக்கு மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பப்படாது.  மீண்டும் மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பும்போது அது 111-வது நிகழ்சியாக தொடங்கும்.  பாரதிய ஜனதா வென்ற பிறகு மீண்டும் மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பப்படும்.

மக்களவைத்தேர்தலில் முதல்முறை வாக்காளர்கள் தங்களது வாக்குகளை தவறாமல் செலுத்த வேண்டும்.  தங்களது கனவுகளை நனவாக்க இளைஞர்கள் வாக்குரிமைகளை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து