முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதி நினைவிடத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2024      தமிழகம்
CM-Photo-2024-02-26

சென்னை, சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்திய அரசியலில் முதுபெரும் தலைவராக திகழ்ந்தவர் கருணாநிதி. தமிழ்நாட்டின் முதல்வராக 18 ஆண்டுகள் பதவி வகித்தவர். 80 ஆண்டு கால அரசியல் வாழ்க்கைக்கு சொந்தக்காரர். இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 7-ந்தேதி அன்று தனது 95 வயதில் மரணம் அடைந்தார்.

2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன், சென்னை மெரினா கடற்கரையில் ரூ.39 கோடியில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி பொதுப்பணித்துறை சார்பில் கருணாநிதி நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகம் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டு உள்ளது. பேரறிஞர் அண்ணாவின் நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், இவைகளின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. முதலில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிட கல்வெட்டு மற்றும் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள நினைவிடம் முன்பு நிறுவப்பட்டுள்ள கருணாநிதி சிலையை முதல்வர் திறந்து வைத்தார். பின்னர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கருணாநிதி நினைவிடத்தை பொதுமக்களின் பார்வைக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அமைச்சர் துரைமுருகன், நடிகர் ரஜினிகாந்துடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டரி வாகனத்தில் சென்று கருணாநிதி நினைவிடத்தை பார்வையிட்டார். நினைவிடத்தில், முதல்வர், அமைச்சர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். கருணாநிதி நினைவிட திறப்பு விழாவில் அமைச்சர்கள், தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள், நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து, தி.மு.க. கூட்டணி கட்சித் தலைவர்கள் திருமாவளவன், முத்தரசன், வைகோ, கோபாலகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து