முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வில் விருப்ப மனுக்கள் வழங்கும் பணி இன்றுடன் நிறைவு

வியாழக்கிழமை, 29 பெப்ரவரி 2024      அரசியல்
ADMK

சென்னை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கடந்த 8 நாட்களாக வழங்கப்பட்டு வந்த விருப்ப மனுக்கள் வழங்கும் பணி இன்று 1-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் விருப்ப மனுக்களை வாங்கி சென்றவர்கள் இன்று (1-ம் தேதி) மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்பதால் நேற்று அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது 

பாராளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி தொகுதி, பங்கீடு பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் தி.மு.க.வும், அ.தி.மு.கவும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பங்கீடு செய்வதற்கு முன்னே விருப்ப மனுக்களை வினியோகம் செய்து வருகின்றன.

தி.மு.க. விருப்ப மனுக்களை கடந்த 19-ம்  தேதி வினியோகிக்க தொடங்கியது. அ.தி.மு.க. 21-ம் தேதி முதல் வழங்கி வருகிறது. ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கடந்த 8 நாட்களாக விருப்ப படிவங்களை வழங்கியுள்ளது.

இன்று 1-ம் தேதி இதற்கான கால அவகாசம் நிறைவு பெறுகிறது. புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கும் போட்டியிட விருப்ப மனுக்கள் ஆர்வத்துடன் பெற்று செல்கின்றனர். இதுவரையில் 1000-க்கும் மேற்பட்ட மனுக்கள் வினியோகிக்கப்பட்டதாக அ.தி.மு.க.வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளுக்கும் போட்டியிட ஆர்வமாக உள்ளனர். விண்ணப்ப கட்டணம் பொதுத் தொகுதிகளுக்கு ரூ. 20 ஆயிரமும், தனி தொகுதிகளுக்கு ரூ. 2000 வீதம் வசூலிக்கப்படுகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க. இடம் பெறுவதற்கான சாதகமான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. 

கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படுகிறதோ அவை போக மீதமுள்ள தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிடும் என தெரிந்தும் நிர்வாகிகள் அனைத்து தொகுதிகளுக்கும் மனுக்களை பெற்று சென்றனர். விருப்ப மனுக்களை வாங்கி சென்றவர்கள் இன்று (1-ம் தேதி) மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்பதால் நேற்று தலைமை அலுவலகத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து