முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளஸ்-2 பொதுத்தேர்வை உற்சாகமாக எழுதுங்கள்: த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து

வெள்ளிக்கிழமை, 1 மார்ச் 2024      தமிழகம்
vija7y

சென்னை, பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இன்று தமிழ் பாடத் தேர்வு நடைபெற்ற நிலையில், அதற்கு அடுத்து வருகிற 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஆங்கில பாடத் தேர்வு என ஒவ்வொரு தேர்வுக்கும் 3 முதல் 4 நாட்கள் இடைவெளிவிட்டு வருகிற 22-ந்தேதி வரை பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் என் அன்புத் தம்பி, தங்கைகள் அனைவரும் அனைத்துத் தேர்வுகளையும் உற்சாகத்துடன் எதிர்கொண்டு வெற்றி பெற்று, விரும்பிய துறைகளில் உச்சம் தொட வாழ்த்துகிறேன். என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து