Idhayam Matrimony

தோல்வி குறித்து சிராஜ்

புதன்கிழமை, 16 ஜூலை 2025      விளையாட்டு
Mohammed-Siraj 2024-02-17

Source: provided

லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி.போராடித் தோற்றது.ஜடேஜா தனி ஆளாக கடைசி வரை போராடிய நிலையில் 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது இங்கிலாந்து அணி. இறுதிவரை போராடிய ஜடேஜா 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த டெஸ்டில் கடைசி விக்கெட்டாக சிராஜ் ஆட்டமிழந்ததும் துக்கம் தாங்காமல் தரையில் அமர்ந்தார். அப்போது இங்கிலாந்து அணி வீரர்கள் அவரை சமாதானப்படுத்தினர். இந்நிலையில், லார்ட்ஸ் டெஸ்ட் தோல்வி குறித்து முகமது சிராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "சில போட்டிகள் மட்டுமே எப்போதும் உங்களுடன் இருக்கும். அது அந்த போட்டியின் முடிவுகளால் அல்ல, அதிக உங்களுக்கு கற்றுக்கொடுத்த பாடத்தினால்" என்று பதிவிட்டுள்ளார். 

___________________________________________________________________________________

இங்கி. மன்னருடன் கில்

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி திரில் வெற்றி பெற்றது. ஜடேஜா வெற்றிக்காக இறுதி வரை போராடியது அனைவரது பாராட்டையும் பெற்றது. இதற்கிடையே, இந்திய அணி வீரர்கள் மற்றும் இந்திய அணி வீராங்கனைகள் நேற்று இங்கிலாந்து மூன்றாம் மன்னர் சார்லசை, லண்டனில் உள்ள கிளாரன்ஸ் ஹவுசில் சந்தித்துப் பேசினர்.பிரிட்டனுக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி, இந்திய கிரிக்கெட் போர்டு துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்நிலையில், இங்கிலாந்து மன்னருடனான சந்திப்பு குறித்து இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் கூறியதாவது: மன்னர் சார்லசைச் சந்தித்தது வியப்பாக இருந்தது. எங்களிடம், 'கடைசி பேட்டரான சிராஜ் அவுட்டானது துரதிருஷ்டவசமானது. பந்து உருண்டு சென்று ஸ்டம்சை தகர்த்தது. உங்கள் உணர்வு எப்படி இருந்தது?' என கேட்டார். இதற்கு, 'லார்ட்ஸ் டெஸ்ட் முடிவு துரதிருஷ்டவசமானது. அடுத்த இரு போட்டியில் சிறப்பாக செயல்பட முடியும் என நம்புகிறோம்' என தெரிவித்தோம். மற்றபடி லார்ட்ஸ் டெஸ்ட் கடைசி 3 நாளில் ரசிகர்கள் ஆதரவு எங்களுக்கு அதிகமாக இருந்தது. இதுபோன்ற ரசிகர்கள் கிடைத்துள்ளது உண்மையில் எங்களது அதிர்ஷ்டம் தான். போட்டி 5-வது நாள் கடைசி வரை சென்று 22 ரன்னில் தோற்றாலும், உண்மையில் இங்கு கிரிக்கெட் வெற்றி பெற்றுள்ளது என தெரிவித்தார்.

___________________________________________________________________________________

வளர்ப்பு நாய்களுடன் தோனி 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி சாக்சி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எம்.எஸ்.தோனி - சாக்சி தம்பதிக்கு ஸிவா என்ற ஒரு மகள் இருக்கிறாள். எம்.எஸ்.தோனி செல்லப்பிராணிகள் என்றால் மிகவும் பிடிக்கும். அவர் தனது வீட்டில் நாய்களை வளர்த்து வருகிறார். இந்நிலையில், வளர்ப்பு நாய்களுடன் எம்.எஸ்.தோனி கொஞ்சி விளையாடும் புகைப்படங்களை அவரது மனைவி சாக்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. 

___________________________________________________________________________________

இந்தியா வரும் உசைன் போல்ட் 

ஜமைக்கா நாட்டை சேர்ந்த முன்னாள் பிரபல ஓட்டப் பந்தய வீரர் உசைன் போல்ட். 100 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனையாளரான அவர் ஒலிம்பிக்கில் 8 தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்த நிலையில் உசைன் போல்ட் செப்டம்பர் மாதம் இந்தியா வருகிறார். செப்டம்பர் 26-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை டெல்லி, மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இது குறித்து உசைன் போல்ட் கூறியதாவது:-

இந்தியாவுக்கு செல்வதை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். மிகவும் உற்சாகத்துடன் இருக்கிறேன். இந்திய மக்கள் விளையாட்டின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள். எனக்கு இந்தியாவில் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார். உசைன் போல்ட் இந்தியா வர இருப்பது 2-வது முறையாகும். ஏற்கனவே அவர் 2014-ம் ஆண்டு வந்திருந்தார்.

___________________________________________________________________________________

முகமது கைஃப் குற்றச்சாட்டு

முகமது கைஃப் தன் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: ஜாக் கிராலியுடனான இந்திய கேப்டன் ஷுப்மன் கில்லின் மோதல் இங்கிலாந்து அணியை உசுப்பி விட்டது. எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டிற்குப் பிறகே அவர்கள் பேட்டிங், பவுலிங், கேப்டன்சி மீது கேள்விகள் எழுந்தன. ஆனால் அன்று 3-ம் நாள் ஆட்ட முடிவில் ஷுப்மன் கில் படை செய்த கேலிச் செய்கையால் பென் ஸ்டோக்ஸ் உசுப்பப்பட்டார், அதனால் அவர் உத்வேகமான வேகப்பந்து வீச்சை வீசினார். தொடர்ச்சியாக 14 ஓவர்களை வீசினார்.

ஆகவே ஷுப்மன் கில் தனக்கு ஒத்து வரும் அணுகுமுறையைக் கடைப்பிடித்தால் நல்லது. இந்தத் தோல்வி மூலம் ஷுப்மன் கில் கடினமான பாடமாக இதனை கற்றுக் கொள்வார்.” என்று கைஃப் பதிவிட்டுள்ளார். கைஃபின் இந்தப் பதிவுக்கு நெட்டிசன்கள் உடன்பாடாகவும் எதிர்மறையாகவும் பதிலளித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து