முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவர்களுக்கான சிறந்த நகரங்கள் பட்டியல்- 4 இந்திய நகரங்களுக்கு இடம்

புதன்கிழமை, 16 ஜூலை 2025      இந்தியா
Mumbai 2024-03-26

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் மாணவர்களுக்கான சிறந்த நகரங்கள் தரவரிசையில் 4 நகரங்கள் இடம் பெற்றது.

லண்டனை சேர்ந்த சர்வதேச உயர் கல்வி ஆலோசனை நிறுவனமான 'கியூ.எஸ்.' மாணவர்களுக்கான உயர் கல்விக்கு சிறந்த நகரங்கள் தரவரிசை பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்டியலில், 2½ லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள்தொகையுடனும், உலக தரவரிசை பட்டியலில் குறைந்தபட்சம் 2 பல்கலைக்கழகங்களுடனும் உள்ள 150 நகரங்கள் மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

சுமார் 1 லட்சம்பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அதில், முதல் 130 இடங்களுக்குள் டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை ஆகிய 4 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. 4 நகரங்களும் முந்தைய ஆண்டை விட பல இடங்கள் முன்னேறி உள்ளன. மும்பை, 15 இடங்கள் முன்னேறி 98-வது இடத்தை பிடித்துள்ளது. டெல்லி, 7 இடங்கள் முன்னேறி 104-வது இடத்தை பிடித்துள்ளது. பெங்களூரு 22 இடங்கள் முன்னேறி 108-வது இடத்தை பிடித்துள்ளது. சென்னை, 12 இடங்கள் முன்னேறி, 128-வது இடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து 6 ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்த லண்டன், 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. தென்கொரிய தலைநகர் சியோல், முதல் இடத்தை பிடித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து