முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உருட்டு உருட்டு' பட இசை வெளியீட்டு விழா

புதன்கிழமை, 16 ஜூலை 2025      சினிமா
Uruthu-Uruthu 2025-07-15

Source: provided

ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ், சாய் காவியா மற்றும் சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு  ஜெய்சங்கர் தயாரிப்பில்  பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில்,  உருவாகியுள்ள படம் உருட்டு உருட்டு. நாகேஷின் பேரன் கஜேஷ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் நாயகியாக ரித்விகா ஸ்ரேயா நடித்துள்ளார்.  விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு விழா சமீபத்தில் நடைபெற்றது. 

நிகழ்ச்சியில்  நடிகர் ஆனந்த்பாபு பேசுகையில், உருட்டு உருட்டு படத்தை இயக்குநர்  அழகாக செய்துள்ளார். இதி்ல் என்னுடைய பையன் நாயகனாக நடித்துள்ளான். நான் நடித்த போது எனக்கு எப்படி ஆதரவு தந்தீர்களோ, அதே போல் என் பையனுக்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி என்றார். 

இயக்குநர் கஸ்தூரி ராஜா பேசுகையில், ஆனந்த் பாபு தன் பையனுக்காக  ஒவ்வொரு அலுவலகத்துக்கும்,  போனார். என்னுடைய அலுவலகத்துக்கும் வந்திருந்தார்.  என் பையன்களுடைய அலுவலகத்துக்கும் போயிருக்கார், அந்த தந்தையினுடைய வலிக்கு நீங்கதான் நிவாரணம் கொடுக்க வேண்டும். அதுக்காக இந்த படம் பெரிய வெற்றி பெற வேண்டும் என்றார். மேலும் இப்படத்தில் மொட்டை ராஜேந்திரன், அஸ்மிதா, ஹேமா சின்னாலம்பட்டி சுகி, பாவா லட்சுமணன், சேரன் ராஜ், மிப்பு  இவர்களுடன் தயாரிப்பாளர் பத்ம ராஜு ஜெய்சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து