முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 மெயின் தேர்வுக்கான ரிசல்ட் வெளியீடு: வரும் 26-ம் தேதி நேர்காணல் தொடக்கம்

வியாழக்கிழமை, 7 மார்ச் 2024      தமிழகம்
TNPSC 2023-04-20

சென்னை,  துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி. உள்ளிட்ட குரூப் 1 பதவிக்கான மெயின் தேர்வு ரிசல்ட் நேற்று டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது. மெயின் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான நேர்காணல் வரும் 26-ம் தேதி தொடங்குகிறது. 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) துணை கலெக்டர் 18 இடங்கள், துணை காவல் கண்காணிப்பாளர் 26, 13 கூட்டுறவு சங்க துணை பதிவாளர்கள், 25 வணிகவரி உதவி ஆணையர்கள், 7 ஊரக மேம்பாடு உதவி இயக்குனர், 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்பட 95 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை 2022-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி வெளியிட்டது.

முதல்நிலை தேர்வுக்கு 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான முதல்நிலை தேர்வு அதே ஆண்டு நவம்பர் மாதம் 19-ம் தேதி நடந்தது. மொத்தம் 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 518 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். 

இந்த நிலையில் முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட் கடந்த ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் 2 ஆயிரத்து 162 பேர் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான மெயின் தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10 முதல் 13-ம் தேதி வரை நடந்தது. இத்தேர்வை 2,113 பேர் எழுதினர். இதில் ஆண்கள் 1333 பேர், பெண்கள் 780 பேர், அடங்குவர்.

இந்த நிலையில் குரூப் 1 மெயின் தேர்வுக்கான ரிசல்ட்டை டி.என்.பி.எஸ்.சி. தனது இணையதளமான www.tnpsc.gov.in, www.tnpscexams.in வெளியிட்டுள்ளது. மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்காணல் வரும் 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடக்கிறது. சென்னை பிராட்வேயில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. தலைமை அலுவலகத்தில் இந்த நேர்காணல் நடைபெற உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து