முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூமர் அங்கிள் விமர்சனம்

செவ்வாய்க்கிழமை, 2 ஏப்ரல் 2024      சினிமா
Boomer-Uncle 2024-04-02

Source: provided

வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளும் யோகி பாபு, அவரிடம் இருந்து விவாகரத்து பெற முயற்சிக்கிறார். விவாகரத்து கொடுக்க வேண்டும் என்றால், யோகி பாபுவின் பூர்வீக அரண்மனையில் சில நாட்கள் வாழ வேண்டும், என்று ரஷ்ய நாட்டு பெண் நிபந்தனை விதிக்கிறார். அவரது நிபந்தனைபடி, அந்த அரண்மனையில் சில நாட்கள் தங்கியிருக்க சம்மதிக்கும் யோகி பாபு, அரண்மனையின் மேல் பகுதிக்கு மட்டும் யாரும் செல்லக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கிறார். ஆனால், ரஷ்ய நாட்டு பெண் மட்டும் அவ்வபோது அரண்மனையின் மேல்தளத்தில் உள்ள அறை ஒன்றில் நுழைய முயற்சித்து வருகிறார்.

இதற்கிடையே, யோகி பாபுவை பழிவாங்க துடிக்கும் அவரது நண்பர்கள் சேசு, தங்கதுரை, பாலா மற்றும் ஊர் தலைவர் ரோபோ சங்கர் ஆகியோரும் அந்த அரண்மனைக்குள் நுழைகிறார்கள். இவர்களுடன் திடீர் வருகையாக ஓவியாவும் அந்த அரண்மனைக்கு வர, இவர்கள் அனைவரும் சேர்ந்து செய்யும் கலாட்டாவையும், கலவரங்களையும் காமெடியாக கொடுக்க முயற்சித்திருப்பது தான் ‘பூமர் அங்கிள்’.

முழுக்க முழுக்க ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் படத்தின் காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் ஸ்வாதேஷ்.எம்.எஸ், சிறுவர்களுக்கான படமாகவும் இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து, பாடல் காட்சிகளையும், சில ஸ்பெஷல் காட்சிகளை வைத்திருக்கிறார்.

எந்தவித லாஜிக்கையும் பார்க்காமல், காமெடி நட்சத்திர பட்டாளத்தை வைத்துக்கொண்டு நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்த காமெடி கலாட்டாவை, ரசிகர்களும் எந்தவித லாஜிக்கையும் பார்க்காமல் பார்த்தால் வயிறு வலிக்கும் அளவுக்கு நிச்சயம் சிரிக்க வைக்கும்.

மொத்தத்தில், இந்த ‘பூமர் அங்கிள்’ ஹாலிவுட் காமெடி கலவரம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து