முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி. தேர்தலில் 200 தொகுதிகளில் கூட பா.ஜ.க. வெற்றி பெறாது: மம்தா

சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2024      இந்தியா
Mamata-1

Source: provided

கொல்கத்தா : பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 200 இடங்களில் கூட வெற்றி பெறாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் கூறி வருகின்றனர். 

இந்த நிலையில், பா.ஜ.க. 200 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜல்பைகுரி பகுதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது, 

பா.ஜ.க. 200 இடங்களில் கூட வெற்றி பெறாது. பிரதமர் மோடியின் உத்தரவாதங்களுக்கு இரையாகாதீர்கள். அவை அனைத்து தேர்தல் நேரத்தில் கூறப்படும் வெற்று வாக்குறுதிகள். டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சட்டத்தை பா.ஜ.க. அழித்து விட்டது. இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து