முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி அளிப்பதில் பாரபட்சம் : தி.மு.க. மனு மீது ஐகோர்ட்டில் நாளை விசாரணை

சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2024      தமிழகம்
RS-Bharati 2023 04 14

Source: provided

சென்னை : தி.மு.க.வின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி அளிப்பதில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாக கூறி ஐகோர்ட்டில் தி.மு.க. மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது. 

இது குறித்து தி.மு.க. அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, 

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி தேர்தல் விளம்பரங்களுக்கு அனைத்து கட்சிகளும் தேர்தல் ஆணையத்திடம் முன் அனுமதி பெற வேண்டும். இதன் அடிப்படையில் அனுமதி கேட்டு அளிக்கக் கூடிய விண்ணப்பங்களை 2 நாட்களுக்குள் பரிசீலித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும். 

ஆனால் தி.மு.க.வின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும் போது, அந்த விண்ணப்பங்களை பரிசீலிப்பதில் தேர்தல் ஆணையம் 6 நாட்கள் வரை எடுத்துக் கொள்கிறது. சில விளம்பரங்கள், சாதாரண காரணங்களால் நிராகரிக்கப்படுகிறது. 

தி.மு.க.வின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி அளிப்பதில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுகிறது.   எனவே தி.மு.க.வின் தேர்தல் விளம்பரங்களுக்கான விண்ணப்பத்தை நிராகரித்த தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். 

தி.மு.க.வின் தேர்தல் விளம்பரங்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை (15-ம் தேதி) தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து