முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர்ன்விடா போன்றவற்றை ஆரோக்கிய பானம் என்ற வகையில் இருந்து நீக்குங்கள்: மத்திய அரசு உத்தரவு

சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2024      இந்தியா
Central-government 2021 12-

புதுடெல்லி, இ-காமர்ஸ் தளங்களில் ‘ஹெல்த் டிரிங்க்ஸ்’ வகையிலிருந்து போர்ன்விடா உள்ளிட்ட அனைத்து பானங்களையும் நீக்குமாறு வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ ஏப்ரல் 2 அன்று,  அனைத்து ஈ-காமர்ஸ் நிறுவனங்களையும் தங்கள் வலைத்தளங்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களை சரியான வகைப்படுத்தலை உறுதி செய்யும்படி கேட்டுக் கொண்டது.  பால் சார்ந்த பான கலவை,  தானிய அடிப்படையிலான பான கலவை,  மால்ட் அடிப்படையிலான பானம் உள்ளிட்டவை ‘ஆரோக்கிய பானம்’  வகையின் கீழ் இ-காமர்ஸ் வலைத்தளங்களில் விற்கப்படும் நிலையில் தான் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ சட்டம் 2006 அல்லது அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் கீழ் ‘ஆரோக்கிய பானம்’ என்ற சொல் எங்கும் வரையறுக்கப்படவில்லை அல்லது தரப்படுத்தப்படவில்லை என்று எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ தெளிவுபடுத்தியுள்ளது.  “எனவே, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ அனைத்து இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கும் இந்த தவறான வகைப்படுத்தலை உடனடியாக தற்போதுள்ள சட்டத்தின் கீழ் சரிசெய்ய அறிவுறுத்தியுள்ளது.

தயாரிப்புகளின் தன்மை மற்றும் செயல்பாட்டு பண்புகள் பற்றிய தெளிவு மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதையும்,  தவறான தகவல்களால் பாதிக்கப்படாமல் நுகர்வோர் நன்கு அறியப்பட்ட தேர்வுகளை செய்ய முடியும் என்பதை உறுதி செய்வதையும் இந்த திருத்த நடவடிக்கை உறுதி செய்யும் எனக் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து