முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 33 பேர் பலி

திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2024      உலகம்
Afghanistan 2024-04-15

Source: provided

காபூல் : ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 33 பேர் உயிரிழந்தார்கள்.

ஆப்கானிஸ்தானில் பருவகால மழையினால் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் சிக்கி 3 நாட்களில் குறைந்தது 33 பேர் உயிரிழந்தனர். மேலும் 27 பேர் காயமடைந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக இயற்கை பேரிடர் மேலாண்மைக்கான மாநில அமைச்சகத்தின் தலிபான் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா ஜனன் சைக் கூறுகையில், தலைநகர் காபூல் மற்றும் பல மாகாணங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

இதில் 600க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. 200 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இந்த வெள்ளத்தால் சுமார் 800 ஹெக்டேர் விவசாய நிலங்களும், 85 கிலோமீட்டர் (53 மைல்) சாலைகளும் சேதமடைந்துள்ளன. மேற்கு பரா, ஹெராத், தெற்கு ஜாபுல் மற்றும் காந்தஹார் ஆகிய மாகாணங்கள் அதிக சேதங்களை சந்தித்துள்ளன.

மேலும் ஆப்கானிஸ்தானின் 34 மாகாணங்களில் வரும் நாட்களில் அதிக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து