முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டியர் விமர்சனம்

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2024      சினிமா
Dear-review 2024-04-16

Source: provided

குறட்டை பிரச்சனையை மையமாக வைத்து வெளியான குட் நைட் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அதே கதைக்கருவை வைத்துக்கொண்டு குடும்பத்திற்குள் நடக்கும் குழப்பங்களை நேர்த்தியாக எடுத்துச் சொல்லும் திரைப்படமாக வெளியாகி இருக்கிறது டியர்.

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தூக்கத்தில் குறட்டை விடும் பழக்கம் இருக்கிறது. இதை மறைத்து ஜிவி பிரகாஷை மணம் முடித்து வைக்கின்றனர். இதனால் இருவருக்குள்ளும் பிளவு ஏற்படுகிறது. இந்தப் பிளவு நாளடைவில் விவாகரத்து வரை சென்று விட இதன் பிறகு இருவரும் விவாகரத்து பெற்றார்களா அல்லது மீண்டும் இணைந்தார்களா என்பதே இப்படத்தின் மீதி கதை.  புதுமண தம்பதி வெறும் தூக்கத்திற்கு மட்டும் ஏன் இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 

ஜி.வி பிரகாஷ். அவருடைய தோற்றத்திலும் நடிப்பிலும் எந்த ஒரு மாற்றமும் இன்றி முந்தைய படங்களில் என்ன செய்தாரோ அதையே இந்த படத்திலும் செய்திருக்கிறார். ஜிவி பிரகாஷை விட ஐஸ்வர்யா ராஜேஷுக்கு வயது அதிகம் போல் தெரிகிறது. இதனாலேயே இருவருக்குமான கெமிஸ்ட்ரி சரியாக ஒர்க் அவுட் ஆகவில்லை.

நாம் ஏற்கனவே பார்த்துப் பழகிய ஒரு வரிக் கதையை வைத்துக் கொண்டு 2.30 மணி நேரம் படத்தை ரசிக்க வைக்க முயற்சி செய்த இயக்குநர் டைட்டிலுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை சற்று திரைக்கதைக்கும் கொடுத்து இருந்தால் படம் வெற்றி பெற்று இருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து