முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 6 மாதத்திற்கு பிறகு வள்ளி குகையில் வழிபாடுக்கு பக்தர்களுக்கு அனுமதி

வெள்ளிக்கிழமை, 18 ஜூலை 2025      ஆன்மிகம்
Tiruchendur 2024-04-13

திருச்செந்தூர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள வள்ளி குகையில் வழிபாடு நடத்த பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்திற்காக மெகா திட்ட வளாகப் பணிகள் நடைபெற்று வந்தது. பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த பணிகள் நிறைவு பெற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

90 சதவீத பணிகள் முடிவுற்ற நிலையில் கடந்த 7-ந்தேதி மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து மற்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வள்ளி குகை திருப்பணிகள் நடைபெற்று வந்தது. இதனால் சுமார் 6 மாத காலமாக அங்கு பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. திருப்பணி வேலைகள் முடிவுற்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நேற்று முன்தினம் முதல் பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கோவிலுக்கு வந்த பக்தர்கள் வள்ளி குகைக்கு சென்று வழிபாடு செய்தனர். பின்னர் அங்குள்ள சந்தன மலையில் திருமணம் நடைபெற வேண்டியும், சில பக்தர்கள் குழந்தை வரம் வேண்டியும் தொட்டில் கட்டி வழிபாடு செய்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து