முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் சரத்பவார்

வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2024      இந்தியா
Sharad Pawar-2024-04-25

மும்பை, தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திர பவார் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அக்கட்சியின் தேசியத் தலைவர் சரத்பவார்.

இந்தியாவின் 18வது பாராளுமன்ற தேர்தல் ஏப்.19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை  நடைபெறுகிறது. மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில்  நாட்டில் உள்ள 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு  ஏப்ரல் 19ம் தேதி நடந்து முடிந்துள்ளது.  இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.

இதனையடுத்து இன்று (ஏப். 26ம் தேதி) இரண்டாம் கட்ட தேர்தல் 13 மாநிலங்களின் 83 தொகுதிகளில் நடைபெறுகிறது. இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளதால் நேற்று முன்தினத்தோடு தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்தது. காஷ்மீரின் 370 பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் ஜம்மு மற்றும் காஷ்மீரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திர பவார் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அக்கட்சியின் தலைவர் சரத் பவார் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அக்கட்சியின் மகாராஷ்டிரா மாநிலத் தலைவர் ஜெயந்த் பாடீல் தெரிவித்ததாவது..

“ எங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறோம், தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள விஷயங்ளை எங்கள் தலைவர்கள்  பாராளுமன்றத்தில் எழுப்புவார்கள். நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது, விவசாயிகள் மோசமான நிலையில் உள்ளனர், வேலையின்மை உச்சத்தில் உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில்,  மத்திய அரசின் விசாரணை ஏஜென்சிகளின் தவறான பயன்பாடு மற்றும் தனியார்மயமாக்கல் போன்ற பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம். அதேபோல காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்புவோம். மேலும் பெண்களின் இடஒதுக்கீடு மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பாடுபடுவோம்” என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து