முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரிஷப் பந்த் குறித்து பயிற்சியாளர்

வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2024      விளையாட்டு
Pravin-Amre-2024-04-2

ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தில்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் 43 பந்துகளில் 88 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பையில் கலக்குவதற்கு ரிஷப் பந்த் தயாராகி வருவதாக தில்லி கேப்பிடல்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பிரவின் அம்ரே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக விசாகப்பட்டினத்தில் இரண்டு வாரங்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது. அங்கு வந்த ரிஷப் பந்த் இரண்டு வாரங்களாக அவரை தயார்படுத்திக் கொண்டார். அதன்பின் ஐபிஎல் போட்டிகளில் விளையாடினார். இரண்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடியது அவரது தன்னம்பிக்கையை அதிகப்படுத்தியது. அவரது சிறப்பான ஆட்டத்தை பார்த்தோம். ஆட்டத்தை முடித்துக் கொடுப்பது என்பது மிகவும் முக்கியமானது. ரிஷப் பந்த் தனியொருவராக அனுபவம் வாய்ந்த மோஹித் சர்மாவுக்கு எதிராக 20-வது ஓவரில் 31 ரன்கள் குவித்தார். அவரது இந்த அதிரடியான ஆட்டமே அவர் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார் என்பதற்கு சான்று என்றார்.

 

டிக்கெட் விற்பனை தொடக்கம்

2024 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கதில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்றைய டெல்லி – குஜராத் அணிக்கு இடையேயான போட்டியுடன் 40 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. ஐபிஎல் தொடரில் கடந்த 3 நாட்களுக்கு முன் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20  ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது.

பின்னர் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்து சிஎஸ்கே அணியை வென்றது. இதனால் புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்துக்கு லக்னோ அணி முன்னேறியது. சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனைத்தொடர்ந்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் ஏப். 28-ம் தேதி சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை, வரும் 25-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று காலை 10:40 மணிக்கு இணையதளத்தில் சிஎஸ்கே – எஸ்ஆர்ஹைச் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.

 

காயமடைந்த கேமராமேன்

ஐ.பி.எல். தொடரில் நடைபெற்ற ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்சும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்சும் மோதின. இந்த ஆட்டத்தில் டெல்லி அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில்  டெல்லி அணியின் இந்த வெற்றிக்கு 84 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய ரிஷப் பண்ட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். குறிப்பாக மொகித் சர்மா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 2, 6, 4, 6, 6, 6 என 30 ரன்கள் அடித்த அவர் வெற்றியில் முக்கிய பங்காற்றி முழுமையான பார்முக்கு திரும்பியுள்ளார்.

அந்த வகையில் மொத்தமாக இப்போட்டியில் அவர் அடித்த 8 சிக்சர்களில் ஒரு சிக்சர் போட்டியை படம் பிடித்துக் கொண்டிருந்த "தேபாசிஷ்" எனும் பெயரை கொண்ட கேமராமேன் மேலே பட்டு காயத்தை ஏற்படுத்தியது. அதற்காக போட்டியின் முடிவில் ரிஷப் பண்ட் மனதார மன்னிப்பு கேட்டது பின்வருமாறு., மன்னிக்கவும் தேபாசிஷ் பாய். வேண்டுமென்றே உங்களை அடிக்கவில்லை. ஆனால் நீங்கள் விரைவாக குணமடைவீர்கள் என்று நினைக்கிறேன். அதற்காக குட் லக்" என்று கூறியுள்ளார். ஐ.பி.எல். நிர்வாகம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

2 முன்னணி வீரர்கள் விலகல்

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி மழையால் ரத்தான நிலையில், அடுத்த இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

இந்நிலையில் இந்த தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்களான முகமது ரிஸ்வான் மற்றும் இர்பான் கான் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர். இது பாகிஸ்தான் அணிக்கு பலத்த பின்னடைவாக கருதப்படுகிறது. 

 

கிரிக்கெட் வீரரை தாக்கிய சிறுத்தை 

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ‘கய் விட்டல்’ ஹூமானி பகுதியில் தான் பராமரித்து வரும் இயற்கைப் பாதுகாப்புப் பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த போது திடீரென சிறுத்தையால் தாக்கப்பட்டார். ஆனால், அவரது வளர்ப்பு நாய் ‘சிகாரா’வினால் காயங்களுடன் உயிர் தப்பினார் கய் விட்டால். நாயும் சிறுத்தையிடம் கடிபட்டது. கய் விட்டல் ஜிம்பாப்வே அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர். இவருக்கு இப்போது வயது 51. 1993-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு வரை ஜிம்பாப்வே அணியின் முக்கிய வீரராகத் திகழ்ந்தார். இவர் 46 டெஸ்ட் போட்டிகளில் 2,207 ரன்களை எடுத்ததோடு 51 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். 

இவரது அதிகபட்ச ஸ்கோர் 203 நாட் அவுட். 147 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் ஆடிய கய் விட்டல் 2,705 ரன்களை 11 அரைசதங்களுடன் எடுத்துள்ளார். இதற்கிடையே, இந்தச் சம்பவம் தொடர்பாக கய் விட்டலின் படங்களை வெளியிட்டு அவரது மனைவி ஹன்னா ஸ்டூக்ஸ் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், கய் விட்டல் தலை முழுவதும் காயம் ஏற்பட்டு பேண்டேஜுடன் காணப்பட்டார். சிறுத்தை தாக்கியதையடுத்து இவருக்கு ஹராரே மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது என்று தெரிவித்துள்ளார்.

 

நடிகை தமன்னாவுக்கு சம்மன்

கடந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் சட்ட விரோதமாக ஃபேர்ப்ளே செயலியில் ஒளிபரப்பு செய்யப்பட்டதால், ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு உரிமையை பெற்ற தங்கள் நிறுவனத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக வியாகாம் நிறுவனம் சைபர் கிரைமில் புகாரளித்தது. இதுதொடர்பாக ஃபேர்ப்ளே செயலியை விளம்பரப்படுத்திய பிரபலங்கள் விசாரணை வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு  நடிகர் சஞ்சய் தத்துக்கு மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் அந்த நாளில் தான் இந்தியாவில் இல்லை என்றும், அதற்கு பதிலாக தனது பதிலை பதிவு செய்ய மற்றொரு தேதியை ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டார். இந்நிலையில்  ஏப்ரல் 29 ஆம் தேதி நடிகை தமன்னா பாட்டியாவை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.

 

ரன்களை வாரி வழங்கிய மோஹித் 

ஐபிஎல் தொடரில் மோசமான சாதனைக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியின் மோஹித் சர்மா சொந்தக்காரர் ஆகியுள்ளார். ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் 4 ஓவர்களை வீசிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் மோஹித் சர்மா விக்கெட் எடுக்காமல் 73 ரன்கள் விட்டுக் கொடுத்தார். ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டி ஒன்றில் பந்துவீச்சாளர் ஒருவரால் விட்டுக்கொடுக்கப்படும் அதிகபட்ச ரன்கள் இதுவாகும்.

முன்னதாக சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய பாசில் தம்பி 70 ரன்கள் விட்டுக்கொடுத்ததே அதிகபட்ச ரன்களாக இருந்த நிலையில், தில்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் 73 ரன்கள் விட்டுக்கொடுத்து மோசமான சாதனைக்கு மோஹித் சர்மா சொந்தக்காரர் ஆனார். ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டி ஒன்றில் பந்துவீச்சாளர்கள் விட்டுக் கொடுத்த அதிகபட்ச ரன்கள்: 0/73 - மோஹித் சர்மா (குஜராத் டைட்டன்ஸ்) - தில்லி கேப்பிடல்ஸுக்கு எதிராக, 2024, 0/70 - பாசில் தம்பி (சன் ரைசர்ஸ்) - பெங்களூருவுக்கு எதிராக, 2018, 0/69 - யஸ் தயாள் (குஜராத் டைட்டன்ஸ்) - கொல்கத்தாவுக்கு எதிராக, 2023, 0/68 - ரீஸ் டாப்ளே (ஆர்சிபி) - சன் ரைசர்ஸுக்கு எதிராக, 2024, 0/66 - இஷாந்த் சர்மா (சன் ரைசர்ஸ்) - சிஎஸ்கேவுக்கு எதிராக, 2013.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து