Idhayam Matrimony

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் : 2 கி.மீ. வரிசையில் நின்று தரிசனம்

வெள்ளிக்கிழமை, 17 மே 2024      ஆன்மிகம்
Tirupati 2023-09-29

Source: provided

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. இலவச தரிசனத்திற்காக 2 கி.மீ. தூரம் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். 

கோடை விடுமுறை மற்றும் ஆந்திரா, தெலுங்கானாவில் தேர்தல்கள் முடிந்ததால் 2 மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்தனர். இதனால் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸில் உள்ள அறைகள் மற்றும் நாராயணகிரி பூங்காவில் உள்ள அறைகளில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. 

நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சீலா தோரணம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருப்பதால் அவர்களுக்கு தங்கும் அறைகள் கிடைக்காமல் கோவில் வளாகம், பூங்காக்கள், மரத்தடி உள்ளிட்ட இடங்களில் படுத்து உறங்கும் நிலை ஏற்பட்டது.  திறந்த வெளியில் தங்குவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து