முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தைவான் நாடாளுமன்றத்தில் அடிதடியில் ஈடுபட்ட எம்.பி.க்கள் : மசோதாவை தூக்கி கொண்டு ஓடிய உறுப்பினரால் பரபரப்பு

சனிக்கிழமை, 18 மே 2024      உலகம்
Taiwan 2024-05-18

Source: provided

 தைவான் : புதிய விதிமுறைகளை கொண்டு வருவது தொடர்பாக தைவான் நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது  உறுப்பினர்கள் அடிதடியில் ஈடுபட்டனர். மத்தியில் கைகலப்பு ஏற்பட்டது. மேலும் சபாநாயகர் முன்பு இருந்த சட்ட மசோதாவை எடுத்துக் கொண்டு உறுப்பினர் ஒருவர் வெளியே ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.  

தைவானில் புதிய அதிபராக லாய் சிங் தே விரைவில் பதவியேற்க உள்ளார். அவரது ஜனநாயக முன்னேற்றக் கழகம் பெரும்பான்மை பெறவில்லை என்றாலும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க உள்ளது. அந்த கட்சியை விட அதிக இடங்கள் பெற்ற கே.எம்.டி. கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற விதிமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வர வலியுறுத்தினர். அதன்படி அவையில் பொய்யான கருத்துக்களை கூறுபவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். 

இது தொடர்பாக அவையில் நடந்த விவாதம் வாக்குவாதமாக மாறியது. உறுப்பினர்கள் இடையே கைகலப்பு ஏற்பட, ஒருவர் சபாநாயகர் முன்பு இருந்த சட்ட மசோதாவை எடுத்துக் கொண்டு வெளியே ஓடினார். அனைத்து உறுப்பினர்களும் மேசை மீது ஏறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். நேற்று முன்தினம் இரவு வரை இந்த தகராறு நீடித்தது. இதனால் நாடாளுமன்றம் பரபரப்பாக காணப்பட்டது. 

கடந்த 2020-ம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து பன்றிகளை இறக்குமதி செய்யும் விவகாரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு கே.எம்.டி. கட்சியினர் ஆளுங்கட்சியினர் மீது பன்றியின் குடலை எரிந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து