முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் கார் விபத்து: 3 இந்திய மாணவர்கள் பலி

செவ்வாய்க்கிழமை, 21 மே 2024      உலகம்
America 2024-05-21

வாஷிங்டன், அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் நடந்த கார் விபத்தில், இரண்டு பெண்கள் உட்பட, அமெரிக்க வாழ் இந்திய மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அமெரிக்காவில் ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் படித்த, 5 அமெரிக்க வாழ் இந்திய மாணவர்கள் சென்ற கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியது. இந்த விபத்தில் ஆர்யன் ஜோஷி, ஷ்ரியா அவர்சாலா, அன்வி சர்மா ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் ரித்வாக் சோமேபல்லி, முகமது லியாகாத் ஆகிய 2 பேர் பலத்த காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் விசாரணையில், கார் வேகமாக சென்றது தான் விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. விபத்துக்கான காரணத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த 3 மாணவர்களின் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்து இணையவாசிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து