முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடவுள் அனுப்பியதாக கூறும் பிரதமர் ஏழைகளுக்காக எதுவும் செய்யவில்லை: பிரச்சாரத்தில் ராகுல் குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 23 மே 2024      இந்தியா
Rahul-2024-05-23

புது டெல்லி, கடவுள் அனுப்பியதாக கூறும் பிரதமர் மோடி ஏழைகளுக்காக  எதுவும் செய்வதில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது,

தன்னை கடவுள் அனுப்பியதாக கூறும் பிரதமர் மோடி 22 தொழில் அதிபர்களுக்காக மட்டுமே வேலை செய்கிறார்.  அம்பானி, அதானியின் விருப்பத்தின் படி, பிரதமர் மோடி அனைத்தையும் செய்கிறார். ஏழைகளுக்கு சாலைகள், மருத்துவமனை, கல்வி ஆகியவற்றை ஏற்பாடு செய்ய, கோரிக்கை வைத்தால் பிரதமர் மோடி எதுவும் செய்வதில்லை. 

அரசியலமைப்பு சட்டத்தை பா.ஜ.க. வினர் ஒழிக்க நினைக்கிறார்கள். ஏனென்றால் அரசியலமைப்புச் சட்டமே ஏழைகளுக்கு உரிமைகளை வழங்கியுள்ளது. நீங்கள் இண்டியா கூட்டணி ஆட்சியை தேர்வு செய்து அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்றுங்கள். இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து