முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கபாலீஸ்வரர் கோவில் நிலத்தில் கலாசார மையம் கட்ட தடை: சென்னை ஐகோர்ட் உத்தரவு

வியாழக்கிழமை, 23 மே 2024      தமிழகம்
chennai-high-court 2022-08-29

சென்னை, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிலத்தில், கலாசார மைய கட்டுமான பணிகளை வழக்கு முடியும் வரை நிறுத்தி வைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமாக, கிரீன்வேஸ் சாலையில் உள்ள 22.80 கிரவுண்ட் நிலத்தில், கலாசார மையம் கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த மையம், 28.76 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என கடந்த 2023 செப்டம்பர் 4-ம் தேதி, தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதற்கு பா.ஜ.க.  உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில், கலாசார மையம் கட்ட தடை விதிக்க கோரி, மயிலாப்பூரைச் சேர்ந்த இண்டிக் கலெக்டிவ் அறக்கட்டளை நிர்வாகி டி.ஆர். ரமேஷ் என்பவர், சென்னை ஐகோர்ட்டில்  பொது நல மனு தாக்கல் செய்தார். 

சட்டப்படி கோவில் நிதியை பயன்படுத்துவது தொடர்பாக ஆட்சேபங்கள் ஏதும் பெறப்பட்டதா? என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி, அறநிலையத்துறைக்கு கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. இம்மனு நேற்று நீதிபதிகள் சுவாமிநாதன், பாலாஜி ஆகியோரை கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, உரிய அனுமதிகளைப் பெறாமல் எந்த கட்டுமானமும் மேற்கொள்ளப்பட மாட்டாது. கோவிலின் நன்கொடையை பயன்படுத்துவதாக இருந்தால் மட்டுமே ஆட்சேபங்கள் கோர வேண்டும். இந்த கலாசார மையம் மூலமாக கோவிலுக்கு வருவாய் கிடைக்கும் என தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விளக்கம் அளித்தார். 

இதையடுத்து வழக்கு முடியும் வரை கலாசார மைய கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்க தமிழக அரசுக்கு நீதபதிகள் உத்தரவிட்டனர். அதை தொடர்ந்து வழக்கு மீதான விசாரணை ஜூன் மாதம் மூன்றாவது வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து