முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ம.க.பொருளாளராக திலகபாமாவே நீடிப்பார்: ராமதாஸ் உத்தரவை புறக்கணித்த அன்புமணி

வெள்ளிக்கிழமை, 30 மே 2025      தமிழகம்      அரசியல்
Anbumani 1

சென்னை, பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளராக பொதுக்குழுவால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட திலகபாமாவே தொடர்வார் என்று  அன்புமணி தெரிவித்துள்ளார்.

 பா.ம.க.வில் உட்கட்சி மோதல் எழுந்திருக்கும் சூழலில், கட்சியின் மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோரை சந்தித்து அன்புமணி ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். சென்னை சோழிங்கநல்லூரில்  நேற்று (வெள்ளிக்கிழமை) முதல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட 23 மாவட்டச் செயலாளர்களில் 22 மாவட்டச் செயலாளர்கள் வருகை தந்துள்ளனர். இந்த கூட்டத்தில் பா.ம.க. பொருளாளர் திலகபாமா பங்கேற்றுள்ளார். இந்த நிலையில் திலகபாமா பா.ம.க. பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். திலகபாமாவுக்கு பதிலாக திருப்பூர் சையத் மன்சூர் பா.ம.க. பொருளாளராக நியமிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பா.ம.க. கட்சி நிதியை வங்கியில் இருந்து சத்தியபாமா கையெழுத்து போட்டால் தான் எடுக்க முடியும் என்று கூறப்படுகிறது. எனவே, முன்கூட்டியே சுதாரித்துக் கொண்டு ராமதாஸ் அவரை பொருளாளர் பதவியில் இருந்து நீக்கியுள்ளார். அதே வேளையில், பா.ம.க.வில் பொருளாளராக திலகபாமாவே நீடிப்பார் என்று அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளராக பொதுக்குழுவால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட திலகபாமா அப்பொறுப்பில் தொடர்வார் என்று அறிவிக்கப்படுகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் அவருக்கு தொடர்ந்து முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து