முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - பாக். போர் நிறுத்தம்: நோபல் பரிசை வாங்கவே டிரம்ப் தம்பட்டம் அடிப்பதாக விமர்சனம்

சனிக்கிழமை, 31 மே 2025      உலகம்
Trump 2023-04-13

வாஷிங்டன், அமைதிக்கான நோபல் பரிசு வாங்கி விட வேண்டும் என்பதற்காக, இந்தியா -பாகிஸ்தான் போர் நிறுத்தம் குறித்து டிரம்ப் தனக்குத்தானே தம்பட்டம் அடித்துக் கொள்வதாக விமர்சனம் எழுந்துள்ளது.

 பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின், இந்தியா பாகிஸ்தான் இடையே சண்டை மூண்டது. இந்த சண்டையை நாங்கள் தான் நிறுத்தினோம் என்று அமெரிக்க அதிபர் கூறி வருகிறார்.  ஆனால், மோதலை நாங்கள் தான் நிறுத்தினோம் என்று திரும்பவும் அதிபர் டிரம்ப் கூறியிருக்கிறார்.

இந்தியா-பாகிஸ்தான் சண்டையிடுவதை நாங்கள் தடுத்துவிட்டோம். அது, அணு ஆயுத போராக மாறி பேரழிவு ஏற்பட்டு இருக்க கூடும். ஒருவருக்கொருவர் துப்பாக்கிசூடு நடத்துபவர்களுடனும், அணு ஆயுதங்களை பயன்படுத்த கூடியவர்களுடனும் நாங்கள் வர்த்தகம் செய்ய முடியாது என்று கூறினோம். இரு நாட்டு தலைவர்களும் அதை புரிந்து கொண்டதால் சண்டை நின்றுவிட்டது. குண்டுகள் மூலம் இல்லாமல் வர்த்தகத்தின் வாயிலாக போரை நிறுத்தியதை நினைத்து பெருமைப்படுகிறோம். ஆனால், இதைப்பற்றி யாரும் பேசுவதில்லை. இவ்வாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

 இந்தியா, பாகிஸ்தான் இடையே அமைதியை நிலை நாட்டியதற்காக பெருமைப்படுவதாக மீண்டும் டிரம்ப் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எப்படியாவது இந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசு வாங்கி விட வேண்டும் என்பதற்காக, இப்படி தனக்குத்தானே தம்பட்டம் அடித்துக் கொள்வதாக, டிரம்ப் மீது விமர்சனம் எழுந்துள்ளது. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் டிரம்ப் தொடர்ந்து இப்படி பேசி வருகிறார்.

அமைதிக்கான நோபல் பரிசு ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அறிவிக்கப்படுகிறது. டிரம்ப் கடந்த முறை அதிபராக இருந்தபோதே, எப்படியாவது நோபல் பரிசு வாங்கி விட வேண்டும் என்று முயற்சித்தார். ஆனால் அவருக்கு கிடைக்கவில்லை. அதனால் இந்த முறை உலகின் பல நாடுகளிலும் போர் நிறுத்த முயற்சிகளை மேற்கொண்டு இருப்பதாக கூறி, நோபல் பரிசு வாங்க தீவிர முயற்சி மேற்கொண்டிருக்கிறார். எனினும் அவரது செயல்பாடுகளை கண்டு, இதுவரை நார்வே நாட்டு நோபல் குழுவினர் பொருட்படுத்தவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து