முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா 'ஏ' - இங்கி., லயன்ஸ் முதல் டெஸ்ட்: கருண் நாயர் இரட்டை சதம்

சனிக்கிழமை, 31 மே 2025      விளையாட்டு
INDIA-1 2024-10-23

Source: provided

கேன்டர்பரி : இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில்  கருண் நாயர் இரட்டை சதம் விளாசினார்.

முதலாவது டெஸ்ட்...

இந்தியா ஏ- இங்கிலாந்து லயன்ஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது ஆதிகாரபூர்வமற்ற டெஸ்ட் (4 நாள் ஆட்டம்) போட்டி கேன்டர்பரியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் அணியின் கேப்டன் ஜேம்ஸ் ரியூ பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஏ அணி நேற்று முன்தினம் ஆட்டநேரம் முடிவில் 3 விக்கெட்டுக்கு 409 ரன்கள் அடித்திருந்தது. கருண் நாயர் 186 ரன்களுடனும், துருவ் ஜூரெல் 82 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். சர்பராஸ் கான் 92 ரன்களிலும், ஜெய்ஸ்வால் 24 ரன்களிலும், அபிமன்யு ஈஸ்வரன் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

கருண் இரட்டை சதம்...

இதனையடுத்து 2-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய ஏ அணியில் கருண் நாயர் இரட்டை சதம் விளாசினார். இரட்டை சதம் அடித்த சிறிது நேரத்திலேயே கருண் நாயர் 204 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனிடையே துருவ் ஜூரெல் 94 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நிதிஷ் ரெட்டி 7 ரன்களிலும் , ஷர்துல் தாகூர் 27 ரன்களிலும் வெளியேறினர்.

533 ரன்கள் குவிப்பு...

தற்போது வரை இந்திய ஏ அணி 119 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 533 ரன்கள் குவித்துள்ளது. ஹர்ஷ் துபே 32 ரன்களுடனும், அன்ஷுல் கம்போஜ் 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து