எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு நேற்று 6ம் கட்ட பாராளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒடிசாவில் 42 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது.
7 கட்டங்களாக...
இந்தியா முழுவதும் 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் (102) கடந்த மாதம் 19-ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் (88) கடந்த மாதம் 26-ம் தேதியும், கடந்த 7-ம் தேதி 3ம் கட்ட தேர்தலும் (93), கடந்த 13-ம் தேதி 4ம் கட்ட தேர்தலும் (96), கடந்த 20-ம் தேதி 5ம் கட்ட வாக்குப்பதிவும் (49) நடைபெற்றது. இதையடுத்து 6ம் கட்ட வாக்குப்பதிவு நேற்று (மே 25)நடைபெற்றது. 7-ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதியும் நடைபெறுகின்றன. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
6 மாநிலங்களில்...
இதன்படி, 6வத் கட்ட வாக்குப்பதிவு பீகார் (8), ஜார்கண்ட் (4), ஜம்மு காஷ்மீர் (1), ஒடிசா (6), உத்தரப்பிரதேசம் (14), மேற்கு வங்கம் (8), ஹரியானா (10) மற்றும் டெல்லி (7) ஆகிய 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. முன்னதாக நேற்று நடந்த 6-வது கட்ட வாக்குப்பதிவில் 889 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இவர்களைத் தேர்ந்தெடுக்க 5.48 கோடி ஆண் வாக்காளர்கள், 5.29 கோடி பெண் வாக்காளர்கள் மற்றும் 5,120 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 11.13 கோடி வாக்காளர்கள் வாக்களித்தனர். இதற்காக 1.14 லட்சம் வாக்குச்சாவடிகள் குடிநீர், கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உடன் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
2 யூனியன் பிரதேசம்...
பீகாரில் வால்மீகி நகர், வைஷாலி உள்பட 8 மக்களவைத் தொகுதிகள், ஹரியானாவில் அம்பாலா, ஹிசார், சோனிபட் உள்பட 10 தொகுதிகள், ஜார்கண்டில் ராஞ்சி மற்றும் ஜாம்ஷெத்பூர் உள்ளிட்ட 4 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோல், ஒடிசாவில் சம்பல்பூர், கட்டாக் உள்ளிட்ட 6 தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் அம்பேத்கர் நகர், சரஸ்வதி உள்பட 14 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் பங்குரா உள்பட 8 தொகுதிகள், டெல்லியில் உள்ள அனைத்து 7 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும், ஜம்மு மற்றும் மற்றும் காஷ்மீரின் அனந்த்நாக்-ரஜோரி தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தொகுதியில் மெஹபூபா முப்தி போட்டியிடுகிறார்.
நீண்ட வரிசையில்...
இந்நிலையில், நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. ஒருசில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் இருப்பதால் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
மேற்குவங்காளத்தில்...
மேற்குவங்காளம் தவிர பெரும்பாலும் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. வாக்குப்பதிவை முன்னிட்டு காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
முக்கிய பிரமுகர்கள்....
நேற்று நடைபெற்ற தேர்தலில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், டெல்லி அமைச்சர் அதிஷி, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் , காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஆம் ஆத்மி எம்பி- ஸ்வாதி மலிவால், ஹரியானா மாநில முன்னாள் துணை முதல்வர் துஷ்யந்த் சௌதாலா, பாஜக புது டெல்லி வேட்பாளர் பன்சுரி ஸ்வராஜ், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த முன்னாள் விமானப்படை அதிகாரி கைது
13 Dec 2025திஸ்பூர், பாகிஸ்தானுக்கு ரகசிய ஆவணங்களை சமூக வலைதளங்கள் வாயிலாக உளவு பார்த்த முன்னாள் இந்திய விமான படைத்தலைவர் கைது செய்யப்பட்டார்.
-
உக்ரைன் துறைமுகங்கள் மீது ரஷ்யா தாக்குதல்-2 பேர் பலி
13 Dec 2025கீவ், உக்ரைன் துறைமுகங்கள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 2 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
வன்னியர்களுக்கு 13 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியது தி.மு.க. அமைச்சர் பெரியசாமி பேச்சு
13 Dec 2025திண்டுக்கல், வன்னியர்களுக்கு 13 சதவீரம் இடஓதுக்கீடு வழங்கியது தி.மு.க.தான் என்று அமைச்சர் பெரியசாமி பேசினார்.
-
முதியவர்களை குறிவைத்து மோசடி: அமெரிக்காவில் இந்தியருக்கு சிறை
13 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவில் முதியவர்களை குறிவைத்து ரூ.62 கோடி மோசடி செய்த இந்தியருக்கு ஏழரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் டிச. 31க்குள் அமல்படுத்தப்படும் டாஸ்மாக் திட்டவட்டம்
13 Dec 2025சென்னை, காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் வருகிற 31-ம் தேதிக்குள் அமல்படுத்தப்படும் என்று டாஸ்மாக் உத்தரவாதம் அளித்துள்ளது.
-
திருவனந்தபுரத்தில் வரலாற்று வெற்றியை பெற்ற பா.ஜ.க.: கேரள மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி
13 Dec 2025திருவனந்தபுரம், திவனந்தபுரத்தில் வரலாற்று வெற்றியை பா.ஜ.க.வுக்கு பெற்று தந்த கேரள மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
-
டெல்லியில் காற்று மாசுபாடு: மக்களின் உடல்நலம் பாதிப்பு
13 Dec 2025புதுடெல்லி, டெல்லியில் காற்று மாசுபாட்டால் மக்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
-
'சால்ட் லேக்' மைதானத்தில் சில நிமிடங்கள் இருந்த மெஸ்சி: கோபத்தில் ரசிகர்கள் கலவரம்
13 Dec 2025அர்ஜென்டினா அணியின் கேப்டனான பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வந்துள்ளார்.
-
அமெரிக்காவில் பட்டம் பெற்ற மாணவர்கள் அவர்கள் நாட்டுக்கே செல்ல வேண்டும்: அதிபர் ட்ரம்ப்
13 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவில் பட்டம் பெற்ற பிறகு இந்தியா, சீனா உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்கள் நாடு திரும்ப வேண்டியிருப்பது அவமானம் என அமெரிக்க அதிபர் கொனால்டு ட்ரம்ப் தெரிவித
-
தாய்லாந்து-கம்போடியா இடையே மீண்டும் போர் நிறுத்த உடன்பாடு : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்
13 Dec 2025நியூயார்க், தாய்லாந்து-கம்போடியா இடையே மீண்டும் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 14-12-2025
14 Dec 2025 -
த.வெ.க. வேட்பாளர்கள் அறிவிப்பு குறித்து புஸ்ஸி ஆனந்த் விளக்கம்
14 Dec 2025திருச்செங்கோடு, த.வெ.க.வின் வேட்பாளர்களை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மட்டும் தான் அறிவிப்பார்” என அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.
-
கவர்னரின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாதது ஏன்? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்
14 Dec 2025கும்பகோணம், கவர்னர் கலந்துகொள்ளும் பட்டமளிப்பு விழாக்களில் நாங்கள் கலந்து கொள்ளாதது ஏன் என்பது குறித்து தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் விளக்கமளித்துள்ளார்
-
சிரியாவில் ராணுவ வீரர்கள் உட்பட அமெரிக்கர்கள் 3 பேர் படுகொலை: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சூளுரை
14 Dec 2025வாஷிங்டன், சிரியாவில் ராணுவ வீரர்கள் உட்பட 3 அமெரிக்கர்கள் படுகொலை சம்பவத்திற்கு நிச்சயம் பதிலடி தரப்படும் என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
இந்திய ரூபாய் நோட்டுகளை அனுமதிக்க நேபாளம் முடிவு
14 Dec 2025காத்மாண்டு, இந்திய ரூபாய் நோட்டுகளை மீண்டும் அனுமதிக்க நேபாளம் முடிவு செய்துள்ளது.
-
மூடுபனியால் விபரீதம்: அரியானாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து
14 Dec 2025சண்டிகர், அரியானா மாநிலத்தில் நெடஞ்சாலைகளில் நிலவிய மூடுபனியால் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதில் பலர் காயமடைந்தனர்.
-
சென்னை: செல்லப்பிராணிகளுக்கு உரிமை பெற காலக்கெடு நிறைவு: இன்று முதல் ரூ.5 ஆயிரம் அபராதம்
14 Dec 2025சென்னை, சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு உரிமை பெற காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் உரிமை பெறாதவர்களுக்கு இன்று முதல் ரூ.
-
3 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்
14 Dec 2025சென்னை, பிரதமர் மோடி அடுத்த மாதம் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தென் ஆப்பிரிக்காவில் கோவில் இடிந்து இந்தியர் உள்பட 4 பேர் பலி
14 Dec 2025கேப்டவுன், தென் ஆப்பிரிக்காவில் கோவில் இடிந்து விழுந்த விபத்தில் இந்தியர் உள்பட 4 பேர் பலியாயினர்.
-
ஆஸ்திரேலியாவில் பயங்கரம்: இரண்டு மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி
14 Dec 2025சிட்னி, ஆஸ்திரேலியாவில் 2 மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலியான சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
-
மெஸ்ஸி-ராகுல் காந்தி சந்திப்பு
14 Dec 2025ஐதராபாத், ஐதராபாத்தில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை சந்தித்தார்.
-
நேபாளத்தில் திடீர் நிலநடுக்கம்
14 Dec 2025காத்மண்டு, நேபாளத்தில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.;
-
தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட தகுதியானவர்களுக்கு ரூ. ஆயிரம் நிச்சயம் கிடைக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
14 Dec 2025தருமபுரி, தமிழகத்தில் ஏற்கனவே 1 கோடியே 13 லட்சம் பேருடன் மொத்தமாக 1 கோடியே 30 லட்சம் பேருக்கு உதவித் தொகை வழங்கியுள்ளோம்.
-
காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் முக்கிய தளபதி பலி
14 Dec 2025காசா சிட்டி, காசா முனையில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. காசா சிட்டியில் சென்ற காரை குறிவைத்து டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.
-
மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்: பெண்ணை அடித்துக்கொன்ற புலி
14 Dec 2025மும்பை, மகாராஷ்டிராவில் பெண்ணை புலி அடித்துக்கொன்ற சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


