முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் மேலும் ஒரு மனு

திங்கட்கிழமை, 10 ஜூன் 2024      இந்தியா
Supreme-Court 2023-04-06

புது  டெல்லி, இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு) எழுதியவர்களில் 1,500-க்கும் அதிகமான தேர்வர்களுக்கு கருணை மதிப்பெண் அளிக்கப்பட்ட விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஏற்கெனவே பீகாரில் நீட் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, நிகழ்வாண்டுக்கான தேர்வை மீண்டும் நடத்தக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கருணை மதிப்பெண் விவகாரத்தில் மேலும் ஒரு மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்காக சுப்ரீம் கோர்ட்டில் பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரியாணாவில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 6 மாணவர்கள் உள்பட நாடு முழுவதும் 67 பேர் நீட் தேர்வில் 720-க்கு 720 பெற்றது பெரும் சர்ச்சையானது. ‘நீட் தேர்வில் குறிப்பிட்ட சில மாணவர்களுக்கு மட்டும் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது’ என்று சில மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.

இதை மறுத்த என்டிஏ, ‘என்சிஇஆர்டி பாடப் புத்தகங்களில் மேற்கொள்ளப்பட்ட சில மாற்றங்களாலும் தேர்வு மையங்களில் சில தேர்வர்கள் நேரத்தை இழந்ததாலும் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது’ என்று விளக்கம் அளித்தது.இந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து, நிகழாண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் வலியுறுத்தல் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து, கருணை மதிப்பெண் அளிக்கப்பட்ட விவகாரம் குறித்து 4 பேர் கொண்ட உயர்நிலைக் குழு அமைத்து விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து