முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சற்று சரிவு

திங்கட்கிழமை, 10 ஜூன் 2024      தமிழகம்
Gold 2022-12-31

Source: provided

சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து விற்பனையானது.

தங்கம் விலை கடந்த மாதத்தில் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது. நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. இந்த நிலையில் அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலை ஒரே நாளில் மூன்று முறை அதிகரித்து அதிர்ச்சியளித்தது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு எவ்வித மாற்றமின்றி ரூ.53,200-க்கு விற்று வந்த நிலையில், நேற்று சற்று குறைந்தது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,040-க்கு விற்பனையானது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,630-க்கு விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.96.20-க்கு விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து