Idhayam Matrimony

ஒரு அணிக்கு எதிராக அதிக வெற்றிகள்: டி-20 உலகக்கோப்பையில் சாதனை படைத்த இந்தியா

திங்கட்கிழமை, 10 ஜூன் 2024      விளையாட்டு
Indian-team 2023-10-30

Source: provided

நியூயார்க் : ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக வெற்றிகள் பெற்று  டி20 உலகக்கோப்பையில் புதிய சாதனை படைத்துள்ளது இந்திய அணி.

நியூயார்க்கில்...

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய நேரப்படி நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு நியூயார்க்கில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 42 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 120 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது.

திரில் வெற்றி... 

இதன் மூலம் 6 ரன் வித்தியாசத்தில் இந்தியா திரில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜஸ்ப்ரீத் பும்ரா 3 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதாவது டி20 உலகக்கோப்பையில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக வெற்றிகள் பெற்ற அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது. அந்த வகையில் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக 7 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. இந்த பட்டியலில் 2வது இடத்தில் பாகிஸ்தான் (வங்காளதேசத்திற்கு எதிராக 6 வெற்றி), இலங்கை (வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 6 வெற்றி) அணிகள் உள்ளன.

அதிக வெற்றிகள் பெற்ற அணி:

1) 7 - இந்தியா - பாகிஸ்தான்.

2) 6 - பாகிஸ்தான் - வங்காளதேசம்.

3) 6 - இலங்கை - வெஸ்ட் இண்டீஸ்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 12 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 13 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 14 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 14 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 12 months 13 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 12 months 13 hours ago
View all comments

வாசகர் கருத்து