முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5.4 ஓவர்களில் நமீபியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

புதன்கிழமை, 12 ஜூன் 2024      விளையாட்டு
12-Ram-53

Source: provided

ஆண்டிகுவா: நமீபியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

24-வது லீக்...

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நடைபெற்ற 24-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலிய அணி நமீபியாவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதையடுத்து நமீபியா முதலில் பேட்டிங் செய்தது.

எளிய இலக்கு...

ஆஸ்திரேலியாவின் அபார பந்துவீச்சில் சுருண்ட நமீபியா, 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 72 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹெகார்ட் எராஸ்மஸ் 36 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக ஆடம் சம்பா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 73 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 5.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்து இலக்கை கடந்தது.

அபார வெற்றி...

அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய டேவிட் வார்னர் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் 34 ரன்களுடனும், மிட்செல் மார்ஷ் 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நமீபியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து