முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சொந்தமாக ஸ்மார்ட்போன் வெளியிடும் எலான் மஸ்க்: டுவிட்டரில் சூசக தகவல்

வியாழக்கிழமை, 13 ஜூன் 2024      உலகம்
Elon-Musk-2024-06-13

வாஷிங்டன், டுவிட்டர் பிராண்டிங் கொண்ட புது ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். 

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனம் ஆப்பிள், சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச டெவலப்பர்கள் மாநாடு  நிகழ்வில் அந்நிறுவனம் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ. சார்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. 

அந்த வரிசையில், ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் என்ற பெயரில் மென்பொருள் சேவையை அறிமுகம் செய்தது. இதோடு, தனது நிறுவன சாதனங்களில் ஓபன் ஏ.ஐ. நிறுவனத்தின் சாட்ஜிபிடி சேவைகள் படிப்படியாக ஒருங்கிணைக்கப்பட இருப்பதாகவும் அறிவித்தது. 

ஆப்பிள் நிறுவனத்தின் இந்த அறிவிப்பை உலகின் மிகப் பெரிய பணக்கராரரும், டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் கடுமையாக சாடினார். இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக ஸ்மார்ட்போன் துறையில் களமிறங்குவீர்களா என்ற டுவிட்டர் பயனரின் கேள்விக்கு எலான் மஸ்க் பதில் அளித்தார். அதில்  இது சம்பந்தமில்லாத கேள்வி ஒன்றும் கிடையாது என பதில் அளித்துள்ளார். 

எலான் மஸ்க் அளித்திருக்கும் இந்த பதில் காரணமாக எதிர்காலத்தில் டுவிட்டர் பிராண்டிங் கொண்ட புது ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

முன்னதாக ஆப்பிள் நிறுவனத்தை கடுமையாக வசைபாடிய எலான் மஸ்க், தங்களுக்கென சொந்தமாக ஏ.ஐ. உருவாக்க முடியாத ஆப்பிள் நிறுவனம், ஓபன் ஏ.ஐ. மூலம் உங்களது பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை உறுதிப்படுத்தி விடும் என்பது அபத்தமாக இருக்கிறது. 

உங்களின் தரவுகளை ஓபன் ஏ.ஐ.யிடம்  கொடுத்து விட்டால் அதற்கு என்னவாகும் என்பது பற்றி ஆப்பிள் நிறுவனத்துக்கு எந்த அக்கறையும் இல்லை. அவர்கள் உங்களை விற்கிறார்கள் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து