எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, பிரதமர் மோடி தலைமையிலான அரசு 3-வது முறையாக பொறுப்பேற்றதும் முதல் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம், வரும் 22-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையைக் கொண்டு வரும் நோக்கத்தில் கடந்த 2017-ல் ஜூலை 1-ம் தேதி புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) அறிமுகம் செய்யப்பட்டது. இதைக் கண்காணிக்கவும் வட்டி நிர்ணயம் தொடர்பான முடிவுகளை எடுக்கவும் ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் தலைவர் ஆவார். அதே நேரத்தில், அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்களும் அதில் உறுப்பினர்களாக உள்ளனர். கடைசியாக 52-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் 2023-ம் ஆண்டு அக்டோபர் 7- ம் தேதி நடைபெற்றது.
அதன்பிறகு, லோக்சபா தேர்தலுக்கு பிறகே அடுத்த கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தேர்தல் முடிவுகள் வெளியாகி, பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி பொறுப்பேற்றதும், நிதியமைச்சராக மீண்டும் நிர்மலா சீதாராமன் பதவியேற்றார்.
இந்த நிலையில் 53-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் வரும் 22-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


